
:மலேசியாவின் 10வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தனது 79வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1947 ஆகஸ்ட் 10 அன்று பினாங்கின் Cherok Tok Kun பகுதியில் பிறந்த அவர், மாணவர் இயக்கங்களிலிருந்து அரசியல் மேடைக்கு வந்தவர்.
அன்வர் இப்ராகிம், 1980களில் கலாச்சாரம், வேளாண்மை, கல்வி, நிதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, 1993-98 காலத்தில் துணைப் பிரதமராக இருந்தார்.
1998-ல் நடந்த Reformasi இயக்கம் அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. பல்வேறு சவால்களை எதிர்கொண்ட அவர், 2022 நவம்பர் 24 அன்று மலேசியாவின் பிரதமராக பதவியேற்றார்.
இன்று, மலேசியா MADANI என்ற அவரது பார்வையில் பயணிக்கிறது.
நீதி, வெளிப்படைத் தன்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக சொல்லப்படுகிறது மடாணி முழக்கம்.
அவரின் பிறந்தநாள், மலேசிய மக்களுக்குப் புதிய நம்பிக்கையும், அரசியல் சீர்திருத்தத்தின் தொடர்ச்சியையும் நினைவூட்டுகிறது.
பிரதமரை வாழ்த்துவதில் குமரியும் மகிழ்கிறாள்!


