Monday, April 20, 2026

ஏஎஸ்டி சார்பில் தைப்பூச தண்ணீர் பந்தல்!

மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தின் இணைய பக்கங்களில் ‘ஏஎஸ்டி’ செய்தித்தளமும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முகிழ்ந்து, அகலக் கால்வைத்து வான வீதியில் தொடர்ந்து பன்னாட்டு-உள்நாட்டு ஊடகத் தகவலை பரப்பி வரும் இணைய தளங்கங்களில் முக்கியமானது ‘ஏஎஸ்டி நியூஸ்’ இணையப் பக்கம்.

நாளை மறுநாள் பிப்ரவரி 11ஆம் நாள் 2025ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய அளவிலும் உலக அளவிலும் அதிகமான பக்தர்களையும் சுற்றுப்பயணியரையும் கவர்ந்திழுக்கும் பத்து மலை தைப்பூச விழா தொடர்பில் இன்று இரவு ஒன்பதரை மணியளவில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தேர் புறப்பட இரூக்கிருகிறது.

கோலாலம்பூர் துன் ஹெச் எஸ் லீ (Tun H S Lee) சாலையில் இருந்து பத்து மலை திருத்தலம் வரை தேர் செல்லும் பாதை நெடுகிலும் இருமருங்கிலும் அரசியல் சமூக ஆன்மீக அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் இணைய-அச்சு ஊடகங்களின் சார்பிலும் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஏஎஸ் டி நியூஸ் இணையதளமும் தன் பங்கிற்கு ஈப்போ சாலை(Jalan Sultan Azlan Shah) மே வங்கிக்கு எதிர்ப்புறம் தண்ணீர்ப் பந்தலை நிறுவியுள்ளது

இந்தத் தேர் நாளை பிப்ரவரி 10, திங்கள்கிழமை பிற்பகலில் பத்து மலயை சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ப்பாதை நெடுகிலும் கால்நடையாக பயணிக்கும் இறை அன்பர்களின் வசதிக்காக இத்தகைய தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை