Monday, April 27, 2026

பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவில் தாமரைக் குழுமம் அன்னதானம்

பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மலேசிய இந்திய வர்த்தக வட்டத்தில் பிரபலமான தாமரைக் குழுமத்தின் சார்பில் நேற்று இரவு, இன்று காலை, மதியம் என மூன்று வேளைகளுக்கு உணவு, குளிர்பானம், தண்ணீருடன் பலகாரங்களும் வழங்கப்பட்டன.

தண்ணீர் மலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய தைப்பூசத் திருவிழாவில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற திருமுருக பக்தர்களும் விழாவை கண்டு களிக்க பொதுமக்களும் பல்லாயிரக் கணக்கில் திரண்டனர்.

இவர்களுக்கு தாமரை வர்த்தக குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துரைசிங்கம் தலைமையிலும் டத்தோ ரெனா ராமலிங்கம், டத்தோ ரெனா நாக சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் அன்னதானம் இடம் பெற்றது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை