Thursday, April 2, 2026

மலேசிய இந்திய இளைஞர் சமுதாய மறுமலர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருக்கும் தலைவர் பொன் வேதமூர்த்தி!

மலேசிய இந்திய சமுதாயத்தின் நாளைய மறுமலர்ச்சி இன்றைய இளைய சமுதாயத்தை அடித்தளமாக கொண்டது என்பதால் மலேசிய இந்திய இளைஞர்கள் குறிப்பாக உயர்கல்வி மாணவர்கள்மீது அதிக அக்கறை கொண்ட தலைவர் பொன் வேதமூர்த்தி.

ஒற்றுமைத் துறை அமைச்சராக அவர் இருந்தபொழுது மலேசிய இந்தியர் சமூக-பொருளாதார-கல்வி உருமாற்றப் பிரிவான மித்ராவின் மூலம் இந்திய இளைஞர்களுக்கான நவீன திட்டங்களுக்கு வழிவகுத்தார்.

குறிப்பாக மலேசியாவின் நான்காவது தொழில் புரட்சி குறித்து அதிகமாக பேசிய தலைவர் பொன் வேதமூர்த்திதான். இந்த நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப இளைய சமுதாயத்தினரும் உயர்க்கல்வி மாணவர்களும் தங்களை தகவமைத்துக் வேண்டும் என்று முடிந்த மட்டும் பேசினார்; பிரச்சாரம் மேற்கொண்டார்.

உயர்கல்விபெறும் ஒவ்வொரு மாணவரும் வெறும் கல்வித் தகுதியுடன் நின்று விடாமல் ஏதாவது ஒரு தொழில்நுட்ப திறமையை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இடையறாது பேசி வருகிறார். குறிப்பாக மலேசிய இந்திய மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சியை அறிமுகப்படுத்தியவரும் அதற்காக மித்ராவழி தேவையான நிதியை ஒதுக்கிய முதல் தலைவரும் பொன். வேதமூர்த்திதான்.

இதன் தொடர்பில் TOSHIBA உள்ளிட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் வர்த்தக அமைப்புகளுடனும் ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.

அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் அமைச்சராக நீடித்திருந்தால் மலேசிய இந்திய இளைய சமுதாயத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்.

2019-2020 ஆம் ஆண்டுகளில் நிலவிய அரசியல் நிலையற்றத் தன்மை அத்தகைய வாய்ப்பைத் தடுத்துவிட்டது. இதனால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வாய்த்த ஒரு பொன்னான வாய்ப்பு தவறியது.

நம் சமுதாய இளைஞர்கள் பாரம்பரியமாக அக்கறை காட்டும் அனிச்சல் உள்ளிட்ட சமையல், Motor Mechanic, டீசல் இயந்திர தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம் போன்றவற்றைத் தவிர டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னியல் தொழில்நுட்பம், Aero Space Engineering ஆகியவற்றின்மீதும் இந்திய இளைய சமுதாயத்திற்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

குறிப்பாக நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப இந்திய இளைஞர்களும் உயர் கல்வி மாணவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பின்தங்க நேரிடும் என்று தொடர்ந்து எச்சரித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை