
சரவாக் மாநிலத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக நான்கு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கனமழை காரணமாக Trusan. ஆற்றில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
இதனால், Trusan, Lawas பகுதிகளைச் சேர்ந்த 4 கிராமங்களில் இருந்து 35 பொதுமக்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதைப்போல சபா மாநிலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1100 க்கும் மேலாக உயர்ந்தது
நேற்று முன்னிரவு நிலவரப்படி Beaufort, Membakut பகுதிகளில் உள்ள 325 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


