Thursday, April 2, 2026

பிபிபி வலிமைமிக்க கட்சியாக உருவெடுக்கும்!டத்தோ டாக்டர் லோகபாலா முழு நம்பிக்கை!!

கோலாலம்பூர் ஏப்ரல் 10-
பல்லின மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்குக் கட்சி. எந்த வகையில் தேர்தல் உள்ளிட்ட எந்த அரசியல் களத்திலும் இனம் சமயம் குறித்து விபரங்களை பயன்படுத்தாமல் நாட்டின் ஒற்றுமை பொருளாதார வளர்ச்சி ஆகியவற்ற இலக்கு வைத்து அரசியல் நடத்துவது பணி செய்ய எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடியது என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

மலேசியர்களின் குரலாக பிபிபி கட்சி தொடர்ந்து ஒலிக்கும்வேளையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என்று தெரிவித்த டத்தோ டாக்டர் லோகபாலா, நாட்டின் இன்றைய தேவை சமய நல்லிணக்கமும் இன ஒற்றுமையும்தான் என்று வலியுறுத்தினார்.

“பிபிபி, ஒரு சிறியக் கட்சி என்று கிண்டல் செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் பிபிபி கட்சி எதிர்கொண்ட சோதனைகளும் சவால்களும் ஏராளம்; ஏராளம்.

கட்சியின் ஒருங்கிணைப்பையும் எதிர்காலத்தையும் புறக்கணித்த ஒரு சில தரப்பினரால் நீதிமன்ற படிக்கட்டுகளிலும் சங்கப் பதிவாக அலுவலகத்திலும்(ஆர்ஓஎஸ்) ஆண்டுக் கணக்கில் ஏறிஇறங்கினோம். கடவுள் அருளால் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று இன்று பிபிபி கட்சியை வழிநடத்தி வருகிறோம்.

பிபிபி கட்சி மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே அனைத்து உறுப்பினர்களும் என்னோடு தோள்கொடுத்து கட்சியை பலமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

பிபிபி கட்சியின் 72-ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று கம்போங் அத்தாப்(Kampung Attap)இல் உள்ள கட்சி தலைமையகத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

பிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ லீ ஹாங், முன்னாள் செயலாளர் டத்தோ அஸ்பார் அலி, நடப்பு செயலாளர் டத்தோ இந்தர் ஜிட் சிங், இளைஞர் அணித் தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவர் புனிதா முனுசாமி, துணைப் பொருளாளர் டத்தோ அண்ட்ரூ, சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட ஏனைய மாநில கட்சி தலைவர்களும் மச்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை