
நாட்டை ஆளுகின்ற மடாணி ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமை ஏற்றுள்ள மக்கள் நீதிக் கட்சி- பிகேஆர்இல் தற்பொழுது நாடு முழுதும் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் உலு சிலாங்கூர் தொகுதி தலைவராக அக்கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான டாக்டர் சத்திய பிரகாஷ் மிகப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் வாக்களிக்கும் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் 5,538 பேர் உள்ளனர்; இவர்களில் 4,618 பேர் தங்களின் கட்சி ரீதியான ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இதில் 3,016 பேரின் அமோக ஆதரவுடன் டாக்டர் சத்யபிரகாஷ் த/பெ நடராஜன் வாகை சூடி இருக்கிறார்.
இவரை எதிர்த்து களம் கண்ட கலைச்செல்வன் ஜெகநாதன் 609 வாக்குகளையும் June Leow Hsiad Hui 993 வாக்குகளையும் பெற்றனர்.


