Thursday, April 2, 2026

தமிழ்மறை ஓதி இரா. மோகனராசு கா.தேவகி திருமணம்

இன்று பினாங்கில் அழகு மிகுந்த கடற்கரை ஓரத்தில் ஜார்ஜ் டவுன் தாமரா டைனிங் நிகழ்வரங்கில் இரா. மோகன்ராச் கா.தேவகி இணையருக்குத் தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி வாழ்வியல் விளக்கங்களைக் கூறி தமிழ்த்திருமணத்தை இனிதே நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு என் கலைச்சொல் அகரமுதலியையும் கைப்பட வழங்கி வாழ்த்தினேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க வாழ்க வாழ்க நற்றமிழர் வாழ்க வாழ்க

சுடர்தமிழ் நெறியினர் வாழ்க வாழ்க சூழ்புகழ் திருக்குறள் வாழ்க வாழ்க

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பியே வாழ்க பார்உயிர் சமன்மையைப் பேணியே வாழ்க

வீழ்ந்த நல்லினத்தினை மீட்டுமே வாழ்க விரிநிலம் போற்றவே வாழ்க வாழ்கவே

மணமக்கள் தம் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

இரா திருமாவளவன்
தேசியத் தலைவர் மலேசியத் தமிழ் நெறி கழகம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை