Thursday, March 19, 2026

மன்னை திமுகவினர் உற்சாகம்!அமைச்சர் டி ஆர் பி ராஜாவைக் கொண்டாடித் தீர்க்கின்றனர்!!

ஒருவரின் திருமண நாளை கொண்டாடுவது ஒன்றும் புதுமை அல்ல; குடும்ப அளவிலும் உறவு- நட்பு வட்டத்திலும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்வது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளிக்கும் என்பது உண்மைதான்.

ஆனால் ஒரு சட்டமன்றத் தொகுதி அளவில் ஒரு கட்சியினர் ஓர் அமைச்சரின் திருமண நாளை கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது.

அந்த வியப்பிற்கும் பெருமைக்கும் உரியவர் தமிழ்நாட்டு அரசின் தொழில்முனைவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாதான்

மன்னார்குடி நகரம் உட்பட தொகுதி அளவிலும் அவர் பிறந்த ஊரான தளிக்கோட்டையில் மிகுதியான அளவிலும் திமுக இளைஞர் படையினர் அமைச்சரின் மண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி திமுக தகவல் பிரிவினரும் இளைஞர் பிரிவினரும் அமைச்சரின் பரந்த சேவையை பிரச்சாரம் செய்யும் வகையிலும் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை புகழும் விதமாகவும் இந்த இன்றைய நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

மன்னார்குடி என்றால் அம்பிகாபதி; அம்பிகாபதி என்றால் மன்னார்குடி என்று ஒரு காலம் இருந்தது.

பொதுவுடமை இயக்கம் வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பிகாபதி தொடர்ந்து இந்த சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வழக்கமாக இருந்தது.

அதை மாற்றி இந்த நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இந்த தொகுதியை திமுக வசப் படுத்தி வருகிறார் டிஆர்பி ராஜா.

கலைஞர் மு கருணாநிதிக்கு ஒரு தளபதியைப் போல இருந்த டி ஆர் பாலுவின் மகனான ராஜா இன்றைய திமுக தலைவருக்கு ஒரு தளபதி போல விளங்குவதுடன் தஞ்சை மண்டலத்தில் மன்னார்குடியை திமுகவின் கோட்டையாக உருவாக்கி இருப்பதுடன் அண்மையில் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின் பொழுது தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் நலம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த வேளையில் திமுக அயலக அணியைச் சேர்ந்த தளிக்கோட்டை வி. எம். வீரபாண்டியனும் அமைச்சருக்கு மணநாள் வாழ்த்து தெரிவிக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை