மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்

காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மகிழ்ச்சி மற்றும் பொழுது போக்குக்காக வந்த அப்பாவிகள்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கோழைத்தனமானது.
அப்பாவிகளின் உயிர்களையும், ஊர் சுற்றிப் பார்ப்பவர்களின் உரிமைகளையும் பறிப்பது என்பது காட்டுமிராண்டித்தனமானது.
இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
23.04.25


