
அரசியல் தலைவர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் தங்கள் பெயரோடு ஊரை சேர்த்துக் கொள்வதுண்டு.
காஞ்சிபுரம் ந. அண்ணாதுரை, திருவாரூர் மு. கருணாநிதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தம், தாப்பா சரவணன், உடுமலை நாராயணகவி, பம்மல் சம்பந்த முதலியார் என்றெல்லாம் ஊர் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்ட பெருமக்கள் உண்டு.
ஆனால் இந்த மலையகத்தில் ஒரு வாகன நிறுவனத்தின் பெயரோடு தன் பெயரையும் இணைத்துக் கொண்டு வர்த்தக உலகில் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி உலா வருகிறார் என்றால் அவர்தான் PERODUAமுனியாண்டி.
முன்பெல்லாம் வாகனம் என்பது ஒரு ஆடம்பர அம்சாமாக கருதப்பட்டது; அப்படி ஒரு காலமும் இருந்ததும் உண்மைதான். ஆயினும், அந்த காலமெல்லாம் மலையேறி மாமாங்கம் பலவாகிவிட்டன.

காரணம், இப்பொழுதெல்லாம் வாசல்படியை தாண்டினாலே மனிதன் அடுத்து காலடி வைப்பது வாகனத்தில்தான்; இன்றைய மலேசியாவில் ஒருவரால், வாகனம் இல்லாமல் ஒரு நாள் வாழ்க்கையைக்கூட நினைத்துப் பார்க்க முடியாது
எளியோர் முதல் வலியோர் முதற்கொண்டு அத்தனை பேருடைய அன்றாட வாழ்வில் மகிழுந்து நிலைத்த இடம் பிடித்து விட்டது. பரபரப்பான வாழ்வில், வாகனம் என்பது, போக்குவரத்திற்கு மட்டுமல்ல; ஒரு சிலருக்கு இணையத்தின்வழி கோப்பு(File) பார்ப்பது, வர்த்தக தொடர்பு கொள்வது, களைத்த நேரத்தில் சற்று இளைப்பாறுவது என எல்லாமும் வாகனத்தில் என்று ஆகிவிட்ட நிலையில் பினாங்கு, தென் செபராங் பிறை, பத்து கவான் வட்டாரத்தில் விருப்பமானவர்களுக்கு விருப்பப்பட்ட வாகனத்தை விருப்பப்பட்ட காலத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுப்பதில் சகலகலா வல்லவராகத் திகழ்கிறார் பெரோடுவா முனியாண்டி; இருந்தபோதும், இவரின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நாட்டின் மையப்பகுதியான சிலாங்கூர் மற்றும் பேராக், கெடா உள்ளிட்ட மாநிலங்களில்தான் மிகுதியாக உள்ளனர்.

காரணம் இவருடைய சேவையின் தரமும் வாகனம் வாங்க விரும்புவோரை வசப்படுத்தும் பாங்கும் அப்படி; வாடிக்கையாளரை அல்லல்படுத்தாமல் அவர்கள் விரும்பும் வாகனத்தை, சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதார நிலை, மாத ஊதியம் ஆகியவற்றுக்கு ஏற்ப எளிய முறையில் குறித்த காலத்திற்குள் வாகனத்தை உரிமைமாக்கிக் கொடுப்பதால், வாகனம் வாங்க விரும்புவோர் மயங்கி விடுகின்றனர்.
மாத சம்பளத்தில் வாழ்வது ஒன்றும் சிறுமையானது அல்ல; ஆனால், மாத ஊதியம் என்னும் ஒரு கட்டத்திற்குள் வாழ்க்கையை வரையறுத்துக் கொள்ளும் கட்டாயம் இருப்பதால், விரும்பிய வாழ்க்கையை விரும்பியபடி ஒருவரால் வாழமுடியாது; பொதுச்சேவையும் செய்ய முடியாது.
சொந்தத் தொழில் இருந்தால், நல்ல வாகனம், வசதியான வீடு, பொதுத் தொண்டு என்றெல்லாம் வாழ முடியும் என்றும் உலகையும் சுற்றிவர முடியும் என அடித்துச் சொல்லும் பெரோடுவாமுனியாண்டி, தான் தேர்ந்தெடுத்த தொழில், வாகன விற்பனை என்று செம்மாந்து குறிப்பிடுகிறார்.

தன்னுடைய தொழிலைப் பொருத்தவரை 90% உழைப்பு என்றும் மீத 10 விழுக்காட்டில் எண்ணத்தையும் பேச்சையும் வரையறுத்துக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்.
தன்னைப் போல இந்திய இளைஞர்கள், ஏதாவது சொந்தத் தொழிலில் ஈடுபட்டால், அவர்களும் வளமான வாழ்வுக்கு சொந்தக்காரர் ஆகலாம்; வாகன விற்பனையைப் பொருத்தவரை, பேச்சுத் திறமை வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டால், சமாளிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் நாடிவருவார்கள் என்று அடித்துச் சொல்கிறார், இவர்.
தான் பணிபுரியும் பெரோடுவா வாகன நிறுவனத்தில் Axia, Bezza, Myvi, Aruz, Ativa, Alza ஆகிய ஆறு வகையான மக்கள் மனம் கவர்ந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மலேசிய சாலைகளில் ஓடுகின்ற வாகனங்களில் ஏறக்குறைய 70% வாகனங்கள், பெரோடுவா நிறுவனத்தின் இந்த ஆறு வகை வாகனங்கள்தான் என்பதை பொது மக்கள் கண்கூடாகக் காணலாம்.
கண்ணைக் கவரும் நிறம், ஓட்டுவதற்கு எளிமை, பெரோடுவா வாகனங்களுக்கு சந்தை மதிப்பு இருப்பதால் எந்த நேரத்திலும் விற்பனை செய்யம் வாய்ப்பு, பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவது போன்ற வாய்ப்பு நிரம்ப இருப்பதால் நாடு முழுவதும் பினாங்கில் இருந்தபடியே வாகன விற்பனை செய்ய முடிவதாகக் குறிப்பிடுகிறார், இவர்.

இவருடைய சேவையை உணர்ந்தவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என அடுத்தவர்களிடத்தில் சொல்வதால் அதில் கவரப்பட்டவர்கள் உடனே இவருக்கு தொடர்பு கொள்கின்றனர்; இதனால் இவரின் சேவையை நாடுவோரின் எண்ணிக்கை நாளும் பெருகி வருகிறது.
ஒருவர் வாகனம் வாங்க வேண்டி இருந்தால், அவர் 2,000 வெள்ளிக்குமேல் மாத ஊதியம் பெறுபவராக இருந்து, மூன்று மாதத்திற்கு மாத சம்பள சிட்டை, அடையாள அட்டை நகல், ஓட்டுநர் உரிம நகல் இவற்றோடு இவரை தொடர்பு கொண்டால் போதும்; அடுத்த சில நாட்களில் அவர்களிடம் ஒரு சொந்த வாகனம் இருக்கும்படி செய்து விடுகிறார் பெரோடுவா முனியாண்டி.
நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், இவரைத் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை அளித்தால்போதும்; அடுத்த சில நாட்களில் அருகில் உள்ள குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று வாகனம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி அவரே ஏற்பாடு செய்து விடுவார்; பின் என்ன? அடுத்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர், ஒரு சொந்தமான வாகனத்தை சொந்த இடத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

Axia, Bezza, Myvi, Aruz, Ativa, Alza வாகனாங்களை விற்பனை செய்யும் பெரோடுவா நிறுவனம், மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக முதல் நிலையில் உள்ளது; மக்களின் மனங்கவர்ந்த இந்த நிறுவனம, ஆசியாவில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது என்பது இன்னும் சிறப்பு.
இவரைத் தொடர்பு கொள்ள; 016-4155377.


