Monday, April 20, 2026

வட மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க பாராட்டு விழா!

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்களில் நாட்டின் வடபுலத்தை சேர்ந்தவர்கள், நேற்று மே 15ஆம் நாள்
பினாங்கு லைட் தங்கம் விடுதியில் சிறப்பிக்கப்பட்டனர்.


மக்கள் ஓசை நாளிதழின் செய்தியாளர் செ குணாளன், தமிழ் மலர் நாளிதழின் ரமணி, மெத்தியூஸ் உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு தலைமையில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் முன்னெடுத்த இந்த விழாவில்
நாட்டின் மையப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர்களும்
விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டனர்.

இவர்கள் அனைவரும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை