
மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் 12 ஆம் ஆண்டுக் கூட்டம் அதன் தேசிய தலைவர் நாக பஞ்சு தலைமையில் இன்று, ஞாயிற்றுக்கிழமை மே 18, பிற்பகல் 2:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
கோலாலம்பூர், பிரிக் ஃபீல்ட்ஸ், பாடாங் பெலியா சாலை ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் ஆலோசகர் இரெ.சு. முத்தையா ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில் ஆற்றவிருக்கும் உரையுடன் இந்த நிகழ்ச்சி எழுச்சியுடன் தொடரும்.


