Monday, May 4, 2026

மலாய்ச் சமூக சலுகையை தற்காக்க மலாய்த் தலைவர்கள் ஒன்றுபடுவதைப் போல நம் உரிமைக்காக ஏன் இந்தியத் தலைவர்கள் ஒன்று படக்கூடாது?

மலாய் மக்களின் சலுகையை தற்காக்க மலாய்த் தலைவர்கள் ஒன்றுபடுவதைப் போல நம் உரிமைக்காக ஏன் இந்திய தலைவர்கள் ஒன்று படக்கூடாது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-MAP உதவித் தலைவர் டத்தோ செல்வம் வினாத் தொடுத்துள்ளார்.

மலேசிய இந்திய சமூகம் எதிர்-கொண்டுள்ள நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியர் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி எல்லையைக் கடந்து ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று அவர் வலியுறுத்தி உள்ளார்..

நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமுதாயமும் முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டு, எதிர்கால தலைமுறை கண்ணியத்துடன் வாழவும் சம உரிமையைப் பெறவும் அனைத்து மலேசியர்களுடனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்-துடன் வாழவும் நாம் அனைவரும் ஒன்றாகக் களம் காண வேண்டும்.

குறிப்பாக, இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை நிவர்த்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் 13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் குறைந்தபட்சம் வெ.25 பில்லியனை ஒதுக்கீடு செய்ய குரல் கொடுப்பதற்கு; மெர்டேக்காவிற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மற்றும் இடப்பெயர்வுக்கு உள்ளான கோயில்-களின் பாதுகாப்பையும் நம் கலாச்சார-ஆன்மீக-பாரம்பரியத்தையும் உறுதி செய்வதற்கு;

  1. வாக்குரிமை இழந்த இந்தியர்களுக்-கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு என் இம்மூன்று முக்கிய அம்சங்களை முன்னெடுப்ப-தற்கு இந்திய சமுதாயத்தின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து சிந்திக்க வேண்டும்.

இன்னும் 32 ஆண்டுகளில் 100வது மெர்டேக்கா ஆண்டை எட்டயிருக்கும் நிலையில், இப்பொழுதாவது நாம் அனைவரும் ஒன்றாக கரம்கோத்து, இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வோம் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டத்தோ செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை