Thursday, April 16, 2026

தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்:

தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியின் நிலை..!

தமிழ்ப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்க் கல்வியின் நிலைகுறித்து மாந்தநேய திராவிடர் கழகத்தின் சார்பில் ஓர் ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியாளர் ‘தமிழ்ச்சுடர்’ மன்னர் மன்னன் மருதை, தமிழ் அறிஞர்
‘முத்தமிழ் முரசு’ இரா. திருமாவளவன்
கல்வியாளர் முனைவர் இரா. குமரன் வேலு, மலேசியத் தமிழ் ஆய்வியல் கழகத் தலைவர் முனைவர் சு. குமரன்,
வழக்கறிஞர். இரா. கனல்வீரன், பத்திரிகையாளர் குமரன் (ஐ சேனல்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருக்கின்றனர்.

ஆசிரியர் அழகன் முன்னிலையிலும்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மு. கெங்கம்மாள் மலையரசன் தலைமையிலும் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் பாவலர் கு.க. இராமன் நெறியாளராக விளங்குவார்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜூன் திங்கள் முதல் நாள் பிற்பகல் 3:00 மணி அளவில், கோலாலம்பூர், பிரிக் பீல்ட்ஸ், பாடாங் பெல்லியா சாலை ருக்குன் தெத்தாங்கா கூட்டரங்கில்
இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை