Tuesday, May 26, 2026

காலமறிந்து செய்யும் சிறு உதவிகூட நலிந்த குடும்பங்களுக்கு பெரும் பற்றுக் கோடாக அமையும்: – எம்பி வி. சிவகுமார்

குளிர்சாதன பெட்டி என்பது ஒரு சிலருக்கு வசதியான வாழ்க்கையின் அடையாளமாக இருக்கலாம்; ஆனால் நலிந்த குடும்பத்தை சேர்ந்த ஓர் எளிய தாய்க்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை.

தனித்துவாழும் ஒரு தாய் உள்ளிட்ட
மூன்று பேரைக் கொண்ட இந்த ஏழைக் குடும்பம் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறது; அந்த அளவிற்கு பொருளா-தார சிக்கல் இவர்களை நெருக்குகிறது.

சமூக நலத்துறை வழங்கும் சிறிய உதவித் தொகையைக் கொண்டு வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்துகின்ற இந்தக் குடும்பத்தின் தாய், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்; அதனால் இவரின் பிள்ளைகள் பள்ளிக்கும் செல்ல முடியாத நிலையில் பிரதிவிக்கின்றனர் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

மனதை கலங்க வைக்கும் வகையில் வாழ்கின்ற இந்தக் குடும்பத்தின் நிலை குறித்து தெரியவந்ததும் இவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதாக இவர் தெரிவித்தார்.

இந்தக் குடும்பத்தினர் விருப்பப்பட்டால் இவர்கள் விரும்புகின்ற வேறொரு இடத்திற்கு சற்று நல்ல சூழ்நிலையில் குடி அமர்த்த விரும்புகிறோம்.

அதேவேளை இந்திய மாதின் சிறு பிள்ளைகள் கல்வியைத் தொடர விரும்-புவதால அவர்கள் மீண்டும் பள்ளி செல்வதற்கான வழிவகை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தின் சார்பில் என்று
இவர்களின் வீட்டுக்கு அண்மையில் சென்று வந்தபின் குளிர்சாதனை பெட்டியை வாங்கியதாகத் தெரிவித்த சிவக்குமார், . Puising வட்டாரத்தில் இந்த குடும்பத்திற்கு அருகில் உள்ள ஒரு சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்-வாரா இந்த குடும்பத்திற்கு தேவையான உணவை வழங்கி வருவதாகத் தெரி-வித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் இக் குடும்பம் ஒரு குளிர்சாதனப் பெட்டியைக் கொண்-டிருந்தால் கிடைக்கின்ற உணவை வீணாக்காமல் பயன்படுத்துவதற்கு துணை புரியும்.

இது மிகவும் எளிதான உதவியாக இருக்கலாம்; ஆனால் இவர்களுக்கு இன்றைய வாழ்வில் இதுவொரு பற்றுக் கோடாக அமையும் என்பது திண்ணம்.

சமூகத்தில் இன்னமும் நல்ல மனமும் கொடைத் தன்மையும் கொண்ட மக்கள் வாழ்வதை எண்ணி பெருமைப்பட வேண்டும். அத்தகைய ஒரு சிலரின் ஆதரவில்தான் இந்தக் குடும்பம் தட்டுத் தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கைப் பயணத்தில் காலம் அறிந்து நாம் செய்கின்ற ஒரு சிறு உதவி கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பெரும் நிலைப்பாடாக அமையும் என்றும் முன்னாள் அமைச்சர்ருமான வி சிவகுமார் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை