
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் அவர்தம் வாழ்த்துதலோடு ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ் கனி மகன் அப்சர் – ரேஷ்மான் அப்ர ஆகியோரின் திருமணம் நேற்று மகா-பலிபுரத்தில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் மரக்கன்று பசுமை கூடையும் வழங்கி மணமக்களை வாழ்த்தினார் முதல்வர்.
இந்த நிகழ்வின்போது சிறுபான்மை-யினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ் எம் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, திருமதி தங்கச்சி தங்க பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூ-னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.


