Thursday, April 2, 2026

பிபிபி கட்சிதேசிய அரசியலில் எந்நாளும் நிலைத்திருக்கும்!சத்யா சுதாகரன் முழக்கம்!!

கோலாலம்பூர், ஜூன் 21:
நாட்டில் பல இனக் கட்சியாக நீண்டகாலமாக செயல்படும் பிபிபி கட்சி தேசிய அரசியலில் எந்நாளும் நிலைத்திருக்கும் என்று பிபிபி கட்சி, விலாயா மாநிலத் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

பிபிபி கட்சியில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு இடமில்லை.
மேலும் இந்தக் கட்சியில் குழப்பம் விளைவித்து வீழ்த்திவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் இப்போது பிபிபி கட்சி சரியான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கிறது.

விலாயா மாநில பிபிபி உறுப்பினர்கள் கட்சிக்கும் தலைவருக்கும் முழு விசுவாசமாக இருக்கின்றனர்.

இன்று கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள டேவான் செர்பாகுணா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான விலாயா மாநில பிபிபி மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே மக்களைப் பெரிதும் பாதிக்கும் பொருட்கள் விலைவாசி உயர்வை அரசாங்கம் கட்டுப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொருட்கள் விலை உயர்வு நடுந்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Rumak Mambu Milik எனப்படும் மக்கள் சக்திக்கு ஏற்றவாறு வாங்கும் வீடுகளை அரசாங்கம் அதிகம் கட்ட வேண்டும் என்று தன் தலைமை உரையில் சத்ய பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை