
கோலாலம்பூர் ஜூன் 22-
மலேசியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்தவர்கள் இந்திய சமுதாயத்தினர். இது வரலாறு.
அப்படிப்பட்ட இந்திய சமுதாயத்தை, பாதிக்கப்பட்ட சமுதாயம் என்று கூறிக் கொண்டிருப்பதைநிறுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால், முன்னிலும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.

அப்போதுதான் நாமும் சொந்த காலில் நிற்க முடியும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய சமுதாயம் சிறப்பான எதிர்காலத்தை எட்ட வேண்டும் என்றால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று விலாயா மாநில பிபிபி கட்சியின் மாநாட்டை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் மேற்கண்டவாறு பேசினார்.
பிபிபி பல்லின மக்களைக் கொண்ட கட்சியாகும்.
1967இல் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக பிபிபி விளங்கியது.
இந்தக் கட்சி மீண்டும் பலமான கட்சியாக உருவெடுக்க கூடுதல் உறுப்பினர்களை பதிவு செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



