Monday, March 9, 2026

டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி

அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சராக Fox தொலைக்காட்சிப் படைப்பாளர் பீட் ஹெக்செத் அறிவிக்கப்பட்டார்.

அவர் முன்பு அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்றியவர்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்குத் மைக்கல் வால்ட்ஸ், மத்தியக் கிழக்குத் தூதராகத் ஸ்டீவ் விட்கொஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

ஸ்டீவ் விட்கொஃப் சொத்துச் சந்தைத் தொழிலதிபர்.

புதிதாக அமைக்கப்படும் அரசாங்கச் செயல்திறன் அமைச்சுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கையும் , அதிபர் வேட்பாராகப் போட்டியிட்ட விவேக் ராமசாமியையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

78 வயதுத் டிரம்ப் அண்மைய அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அதிபராகவுள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி 20-ஆம் தேதி அவர் பதவியேற்பார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை