Sunday, March 8, 2026

பெர்மிம் பேரவையின் ஊடகச் செய்திக்கு கெபிமா மறுப்பு!

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பான பெர்மிம் பேரவை,
கடந்த சனிக்கிழமை ஜூன் 22ஆம் நாள் பினாங்கில் நடத்திய சிறப்புக் கூட்டத்திற்கு கெபிமா பிரதிநிதியாக, நான் கலந்து கொண்டேன்.

Penang Liga M uslim மண்டபத்தில் நடை பெற்ற அந்தக் கூட்டம் தொடர்பான செய்தி, ஓர் இணைய ஊடகத்தில் வெளியிட ப்பட்டது

அதில், கெபிமா பற்றி சில தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் டத்தோ சையத் ஒஸ்மான்
பெர்மிம் அரசிலமைப்பின் நகலை கிழித்ததுடன் பெர்மிமலிருந்து தங்கள் அமைப்பு விலகுவதாகவும் அறிவித்து வெளியேறினார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி முற்றிலும் ஒரு தவறான செய்தியாகும்.

காரணம் பெர்மிம் எனபது அரசு சாரா இயக்கங்களின் பேரவையாகும். பெர்மிம் அரசியல் கட்சி அல்ல. அரசியல் கட்சி என்றால் அதற்கு தனி அரசியல் சம்மதப்பட்ட அம்சங்கள் அந்த சட்ட திட்டங்களில் இருக்கின்றது.

அதைப் போல் அரசு சாரா இயக்கம் என்றால் அதற்கு தனிச் சட்ட- திட்டங்கள் இருக்கின்றது. பொதுவாக அரசியல் அமைப்பு என்றால் நாட்டினுடைய கூட்டாட்சி அரசியலமைப்பக் குறிக்கும். நான் கிழித்தது அரசியலமைப்பின் கூட்டாட்சி நகலையா அல்லது பெர்மிம் பேரவையின் சட்ட திட்ட நகலையா? இதில் எது உண்மை! பதில் கூறவும்.

இந்த வேறுபாடு கூட தெரியாமல் பெர்மிம்யை வழிநடத்தி வருகிறார்கள்.

நான் கிழித்தது பெர்மிம்மின் சட்ட திட்ட நகலை மட்டுமே. அத்துடன் அதிருப்தி வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.

இந்த சூழ்நிலை ஏற்பட்டவதற்கு பெர்மிம் தலைமைத்துவமே பொறுப்பேற்க வேண்டும்.

கெபிமாவுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது.

கூடிய விரைவில் இந்த கசப்பான விசயங்களை பத்திரிகை மூலமாக மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய கடமை கெபிமாவுக்கு உள்ளது.

இந்தத் தவறான செய்திக்கு பெர்மிம் தலைமைத்துவம் பொறுப்பேற்று 14 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது போன்ற பொறுப்பற்ற செயலின்வழி சமூகத்தில் மத்தியில் எனக்கும் கெபிமாவிற்கும் களங்கத்தை ஏற்படுத்தி நல்லெண்ணத்தைக் கெடுக்கிறார்கள்.

நன்றி.

டத்தோ சையத் ஒஸ்மான்
துணைத் தலைவர்
கெபிமா.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை