Thursday, April 2, 2026

தேசிய ஊடக ஆணையம் அதன் நிறுவன வாரிய உறுப்பினர்களை அறிவித்தது!முத்தமிழ் மன்னன் நியமனம்!! இடைக்காலத் தலைவர் பிரமேஷ்

மலேசிய ஊடக ஆணையம் அதன் நிறுவன வாரியத்திற்கான உறுப்பினர்களை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் செய்தி நிறுவனத்தினர், நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியத் தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிறுவன வாரியத்தில் உறுப்பியம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் மாத இறுதியில் அது முற்றுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்துசான் போர்னியோ-வின் ஃபிலிஸ் வோங், சபா பப்ளிஷிங் ஹவுஸ் சார்பில் ஜேம்ஸ் சார்டா, மலேசியாகினியின் பரமேஷ் சந்திரன், ஆஸ்ட்ரோ அவானியின் அஷ்வாட் இஸ்மாயில் ஊடக நால்வரும் ஊடக நிறுவனங்களின் சார்பிலும் ஊடக நிபுணர் வரிசையில் தேசிய ஊடக சங்கத்தின் சார்பில் தே அத்திரா யூசுப், கெராக்கான் மீடியா மெர்டேக்கா சார்பில் ராட்ஸி ரசாக், கூச்சிங் மண்டல ஊடக சங்கத்தின் சார்பில் ரோனி தியோ, தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் இந்த நிறுவன வாரியத்தில் உறுப்பினர்களாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தவிர சமூக ஆர்வளர்கள் சார்பாக மலேசிய நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் காயத்ரி வெங்கடேஸ்வரன், Save Rivers என்னும் அரசு சாரா அமைப்பின் சார்பில் சீலின் லிம், சன்வே பல்கலைக்கழகத்தின் அஸ்மி யூனோர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரியத்தின் இடைக்காலத் தலைவராக மலேசியாகினியின் பரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை