
மலாயாப் பல்கலைக்கழக தமிழ் ஆய்வியல் பிரிவில் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இன்று ஆய்வு இருக்கை தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் முன்னெடுப்பில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ் ஆய்வியல் பிரிவு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்விருக்கையை உயர்க்கல்வி அமைச்சர் முனைவர் டத்தோஸ்ரீ ஸம்ப்ரி அப்துல் காதர் தொடக்கி வைத்தார்.
மலேசியவாழ் தமிழ் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு வர்த்தகம் உள்ளிட்ட எண்ணற்ற தளங்கள் சார்ந்து ஏராளமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அவை பெரும்பாலும் பதிவு செய்யப்படவில்லை அல்லது சமூக வீதியில் பேசப்படுவதில்லை; இதைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கவும் அப்துல் ரகுமான் ஓர் இலக்கியவாதி மட்டுமல்ல சமூக நலம் சார்ந்து எண்ணற்ற பங்களிப்பை அளித்துள்ளார் அவற்றை எடுத்துரைக்கவும் அவர் இயற்றிய எண்ணற்ற இலக்கிய படைப்புகளை குறிப்பாக சாகித்திய அகடமி விருது பெற்ற இலக்கிய படைப்பு குறித்தும் மாணவர்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த ஆய்விருக்கை தொடங்கப்படுவதாக இதன் தோற்றுவாய்க்கு அடித்தளம் இட்ட சிங்கப்பூர் ரஹமத் முஸ்தபா அறக்கட்டளையின் தலைவரும் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனமான முகமது முஸ்தபா தெரிவித்தார்.



