
தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதி பற்றி எரிகிறது; எல்லைப் பதற்றத்தை
தணிக்கும்படி இருநாட்டு பிரதமர்களுக்கும் ஆசியான் தலைவர் அன்வார் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்பொழுது போர்பதற்றும் சற்று தணிந்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஐநா மன்றத்தின் பாதுகாப்புக்குழு கூட்டம் இன்று பிற்பகலில் கூடி இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க இருக்கிறது.
தாய்லாந்து கம்போடிய எல்லைச் சிக்கல் நூற்றாண்டுகளாக தொடரும் பிரச்சனையாகும். கடந்த மே மாதத்தில் கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் இறந்ததிலிருந்து அங்கு ஏற்பட்ட பதற்றம், கனலாக தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஜூலை 24ஆம் நாள் காலையில் திடீரென்று இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த சண்டையினால் இறந்தோரின் எண்ணிக்கைப் பற்றி எந்த விவரமும் சரியாக தெரியாத நிலையில் தாய்லாந்து கம்போடிய எல்லைப் பகுதியில் Oddar Meanchey மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெருந்துள்ளனர் என்று தெரிய வருகிறது.
இந்தப் பகுதியில் இரு நாட்டு பொதுமக்களும் அதிக அளவில் பாதித்துள்ள நிலையில்,
தாய்லாந்தும் கம்போடியாவும் இடம்பெற்றுள்ள ஆசிரிறயான் மண்டலத்திற்கு தலைமை வகிக்கின்ற மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று இரு நாட்டு பிரதமர்களுக்கும் போரை நிறுத்தும்படி கோரிக்கை விட்டிருந்தார்.
கம்போடிய பிரதமர் ஹுன் மானட், தாய்லாந்து பிரதமர் பும்தாம் வெச்சாயாச்சாய் இருவரும் அன்வாரின் ஆலோசனையை ஏற்று சண்டையை நிறுத்தத்திற்கு சம்மதித்தாலும் எல்லைப் பகுதி இன்னமும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கிறது.

வெடிகுண்டுகள், கவச வாகனங்கள் மூலம் இரு தரப்பிலும் மோதிக்கொண்ட நிலையில் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இருந்தாலும் ரத்தக்கரை படிந்த அந்த மண்டலத்தில் இருந்து அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் சிதறி வெளியேறியுள்ளனர்.

ஆசியன் மண்டலம் பொருளாதார- வர்த்தக ரீதியில் மெல்ல முன்னேற்றம் கண்டு வருகின்ற நிலையில் இத்தகைய நடவடிக்கை அதற்கு பாதகமாக அமையும் என்பதை நளினமாக எடுத்துரைத்த பிரதமர் அன்வார் இப்ராகிம், பொருத்தமான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்தத் தலைவராக திகழ்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஐநா மன்றத்தின் பாதுகாப்புக் குழு என்ன முடிவு எடுக்க இருக்கிறது என்று தெரியவில்லை. அதே வேலை, ஐநா பாதுகாப்பு மன்றத்தின் முடிவை தாய்லாந்தும் கம்போடியாவும் எந்த அளவுக்கு மதிக்கும் என்பதும் தெரியவில்லை.
அப்படி இருந்தால் இந்த எல்லைப் பிரச்சனைக்கு எப்பொழுதோ தீர்வு காணப்பட்டு இருக்கும்.
ஆசியன் மண்டலத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றான மியன்மாரை தொற்றி இருந்த பதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த இரு நாடுகளுக்குமான எல்லை பிரச்சினை முற்றி வெடித்து இருக்கிறது.


