
பொதுமக்கள் ஓய்விருந்தால்; வாய்ப்பு இருந்தால் சுற்றுலா இடங்களுக்குச் சென்று மனம் மகிழ்ந்து வருவர். ஆனால் நெகிரி செம்பிலான் மாநிலம் ஜெம்போல் தொகுதியை சேர்ந்த 35 பேர் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பார்த்து தங்களின் தொகுதி பிரதிநிதியையும் சந்தித்து நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து அறிந்து தங்களின் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியது பாராட்டிற்குரியது
நாட்டின் 13-ஆவது பெருந்திட்டம் அறிவிக்கப்பட்ட ஜூலை 31-ஆம் நாள் மக்கள் முற்போக்கு கட்சி (பி பி பி) தாமான் ஜெயா கிளை ஜெம்போல் நெகிரி செம்பிலான், மற்றும் தாமான் ஜெயா குடியிருப்பாளர் சங்கத்தின் ஆதரவோடு ஜெம்போல் தொகுதியைச் சேர்ந்த 35 பேர் நாடாளுமன்றத்திற்கு வருகை கொண்டனர்,
ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சம்சுல் காஹரை மரியாதை நிமித்தம் சந்தித்து ஆடையும் மாலையும் அணிவித்து சிறப்பு செய்தார்.
ஜம்போ பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற உலகத்திற்கு சென்று வருவதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியதற்காக மக்கள் முற்போக்கு கட்சி தாமான் ஜெயா கிளைத் தலைவர் கு. மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சம்சுல் காஹருக்கும் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சைடிக்கும்,நன்றி தெரிவித்தார்
மூர்த்தி மற்றும் கம்போங் தாமான் ஜெயா கிராமத் தலைவர், சமூக சேவையாளர் டாக்டர் கே. ஸ். பாஸ்கரன், பி பி பி ரொம்பின் கிளை தலைவர் முகிலன், ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.


