
அதிமுகவின் தலைவர்களான எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியும் தொடக்கம் முதலே அந்தக் கட்சியில் பயணித்தவருமான அன்வர் ராஜா அந்த கட்சியின் தற்கால தலைவர்- அடிமை அரசியல்வாதி இடைப்பாடி பழனிச்சாமியின் அடிமை அரசியல் பிடிக்காமல் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார்.
அவருக்கு திமுக சார்பில் இப்பொழுது அரவணைப்பு காட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பாரம்பரியமிக்க திமுகவில் இலக்கிய அணிச் செயலாளர் பதவி இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் மேநாள் உறுப்பினரும் மேநாள் அமைச்சருமான அன்வர் ராஜாவுக்கு இப்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அன்வர் ராஜாவுக்கு வழங்கி இருக்கிறார்


