
மலேசிய பிரதமர், மக்கள் நீதிக் கட்சி -பிகேஆர் தேசியத் தலைவர், நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மண்டல அமைப்பான ஆசியானி’ன் நிகழாண்டு தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு இன்று 78ஆவது பிறந்தநாள்.
இவர் பிறந்த இன்றைய ஆகஸ்ட் 10ஆம் நாள் இஸ்லாமிய சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதும் மிக முக்கியமானது மான ஒரு நாள்.
உருவம் இல்லா இறைவனை வழிபாட்டு மார்க்கமாக கொண்டுள்ள இஸ்லாத்தில் மறைநூலான குர்ஆன்தான் முழு முதல் இடத்தை வகிக்கிறது.

அத்தகைய குர்ஆனை முகமது நபி வழங்கிய நாள் இன்றைய நாள்(கி.பி.610) என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் சாவி, இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் வி வி கிரி போன்றோருக்கும் இன்று பிறந்தநாள்.

மலாயா பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த அன்வார் தற்பொழுது நாட்டின் நிருவாகத் தலைவராக இருக்கிறார்.
தன்னுடைய அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்னும் சாதனை ஏராளம் புரியவும் நீடு வாழவும் குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்.



