Thursday, April 2, 2026

புந்தோங்கில் விடுதலை மாத தேசிய உணர்வு!

‘ஜாலோர் கெமிலாங்’-தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட
26 மிதிவண்டிகளில் பவணி வந்தது பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின கொண்டாட்டத்திற்கு முன்பு புந்தோங் கம்போங் பாரு ருக்குன் தெத்தாங்கா நிலையம் தேசிய கொடிமீது தேசப் பற்று பிரதிபலிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்;

அந்த வகையில் இந்த ஆண்டும் தேசிய குடிகளால் அலங்கரிக்கப்பட்ட
சைக்கிளோட்டப் போட்டியை ஏற்பாடு செய்ய அதில் 26 மாணவ- மாணவியர் பவனி வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு சுற்று வட்டார பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து 24 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இத்தகைய நிகழ்விற்கு, இந்த ஆண்டு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் வருகைதந்து அலங்கரிக்கப்பட்ட சைக்களுடன் இருந்த மாணவ மாணவி பங்கேற்ப்பாளர்களிடத்தில் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து அன்பை பகிர்ந்து கொண்டார்.

கம்போங் பாரு ருக்குன் தெத்தாங்கா நிலையத்தின் தலைவர் செல்வ நாதன் செபஸ்தியன் இதுகுறித்து பேசுகையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்குவித்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

ஒற்றுமைத் துறை கிந்தா மாவட்ட அதிகாரி சைசுல்மான் சைனால் அபிடின், இந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்து உரையாற்றிய போது, இளம் மாணவர்களின் இத்தகைய நாட்டுப்பற்று மெய்சிலிர்க்க வைப்பதாக புகழ் மாலை சூட்டினார்.

செய்தி: ந.ஆ.யுவராஜ்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை