
மலேசியாவில் உள்ள இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்களுக்கு பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமும் பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் முக்கிய பங்காற்றி உள்ளன என்று பிரிமாஸ் தோற்றுனரும் நிரந்தரத் தலைவருமான டத்தோ ரெனா இராமலிங்கம் தெரிவித்தார்.

உணவகங்களுக்கு அந்நியத் தொழிலாளர்களைப் பெறுவதில் முட்டுக் கட்டைகள் இருந்தபோதிலும் பிரிமாஸ் மற்றும் பெரிஸ்மா அமைப்புகள் உள்துறை அமைச்சிடமும மனிதவள அமைச்சிடமும் பேச்சு நடத்தி, தொழிலாளர்களைபெற்றுத் தந்துள்ளன.
பிரிமாஸ்- ப்ரெஸ்மா தலைவர்கள் புத்ரா ஜெயாவுக்கு அடிக்கடி சென்று பேச்சு நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.

புத்ரா ஜெயாவுக்கு சென்றால் அவர்கள் ஒருநாள் முழுவதும் இருந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
சங்கத்தின் உறுப்பினர்களுக்குநேரம் காலம் பார்க்காமல் அவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஆகவே பிரிமாஸ் மற்றும் பிரெஸ்மா ஆகியவை இந்திய உணவகங்களின் தாய் வீடாக விளங்குகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு இன்று நடைபெற்ற வேளையில் அதில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


