
கடந்த 2010ஆம் ஆண்டு பத்து பேருடன் தொடங்கிய தேசம் ஊடகத்தின் விருதுப் பயணம், இன்று ஆயிரம் பேரின் வெற்றிக் குரலாக ஒலிக்கிறது.
ஊடகத்துறை சார்ந்த திறமையாளரை அடையாளம் கண்டு சிறப்பு செய்வதே தேசம் ஊடகத்தின் நோக்கம்.
வர்த்தகம், கலைத் துறை, சமூக செயற்பாட்டாளர்கள் வரை, அனைத்து துறைகளிலும் தங்கள் தடத்தை பதித்த திறமையாளர்களுக்கு
தேசம் ஊடகம் வழங்கும் உயரிய மரியாதை தேசம் பன்னாட்டு ஐகோன் விருது!
தேசம் ஊடகம், 2009ஆம் ஆண்டு தோடங்கி,
இன்று முன்னணி இணைய ஊடகமாகத் திகழ்கிறது.
தனித்தன்மை, நம்பிக்கை, நியாயம் — இவை தேசத்தின் அடையாளங்கள்.
நிகழும் 2025ஆம் ஆண்டுக்கான தேசம் பன்னாட்டு ஐகோன் விருது விழா
நவம்பர் 28ஆம் நாள், வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணி அளவில்,
பத்து மலை Shenga Convention Hall-இல்
பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
50 திறமையாளர்கள் — 50 வெற்றிக் கதைகள்!
அவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, சாதனை —
இவை அனைத்தும் தேசம் மேடையில் ஒளிரவிருக்கின்றன.
இவ்வாண்டு முதன்முறையாக,
தேசம் அறிமுகம் செய்கிறது —
ஒரு தனிப்பட்ட, உயரிய அங்கீகாரம்…
‘தேச தளபதி: விருது!
இந்த விருது — ஒருவரின் உச்சமான வெற்றியை,
அவரின் தாக்கத்தை, அவரின் பிரமாண்டத்தை
மலேசியா முழுவதும் பெருமையுடன் வெளிப்படுத்தும்!
தேசம் ஊடகத்தின் 17ஆம் ஆண்டுப் பயணம்,
ஓர் ஊடகத்தின் வெற்றியை மட்டும் அல்ல,
மலேசியத் தமிழரின் சாதனைகளின் வரலாறுமாகும்.
தேசம் பன்னாட்டு ஐகோன் விருது —
அங்கீகாரத்தின் உயர்ந்த மேடை,
திறமைக்கான மரியாதை,
தேசத்தின் பெருமை!
தேசம் – திறமையை கௌரவிக்கும் ஊடகம்.


