
மலேசிய சைவ நற்பணி கழகத்தின் சார்பில் திங்கள்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சைவ நெறி சார்ந்த சொற்பொழிவும் சமய விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை நவம்பர் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி அளவில் கோலாலம்பூர் தான்ஸ்ரீ கே. ஆர். சோமா அரங்கத்தில் சைவ நெறி சொற்பொழிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் துணைத் தலைவர் ‘திருமுறைச் செல்வி’ சைவ ‘சித்தாந்த ரத்தினம்’ நிர்மலா தேவி தர்மலிங்கம், கருவூர் தேவரின் ‘சுந்தர திருப்பதி’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
தவிர, கழகத்தின் செயலாளர் சிவநேய செல்வி அகல்யா தர்மலிங்கம் அவிநாசி திருத்தலம் என்னும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்த இருக்கிறார்.
அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிந்து கொள்ளவும் அவற்றை பின்பற்றுவதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமையும்.
சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவல்ல இந்த நிகழ்ச்சியில் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையில் தங்கள் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொண்டு பயனடையும்படி அழைக்கப்படுகின்றனர்.
பகல் உணவுடன் இந்த நிகழ்ச்சியை நிறைவு பெறும்.


