
தென்கிழக்கு ஆசிய மண்டலத்தை சேர்ந்த மலேசியா தாய்லாந்து வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அண்மைக் கால தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு எதிர்கொண்டு வருகின்றன.
மலேசியாவில் ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் வசிப்பிட சிக்கலை எதிர்கொண்டு வெள்ளத் தூய துடைப்பு மையங்களில் நாடி உள்ளனர்.

இருந்த போதும் கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது; அதே வேளை, திறங்காம பெர்லிஸ் பேரா கெடா நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒரு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கிளந்தான் மாநிலத்தில் ஏறக்குறைய 200 பேர் தங்கள் இல்லங்களுக்கு நேற்று திரும்பினாலும் இன்னமும் 4,111 குடும்பங்களை சேர்ந்த 10,950 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த மாநிலத்தில் ஒன்பது மாவட்டங்களில் 66 தற்காலிக புகலிட மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில இயற்கைப் பேரிடர் நிர்வாக முகமை தெரிவித்துள்ளது. தும்பாட்டில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால் மற்றும் நீர் பாசன துறையின் Infopublic Banjir என்னும் இணைய பக்கத்தில் ரந்தாவ் பஞ்சாங் ‘ங்கோலோ’ ஆற்று வெள்ளமும் லீமாவ் பாஞ்சாங்-குவா மூசாங் பகுதியில் ஓடும் Galas ஆற்று வெள்ளமும் அபாயக் கட்டத்தை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த நாடான தாய்லாந்து நாட்டில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சொங்லா, நராதிவாட், யாலா, Trang, Phatthalung, Satun, Nakhon Si Thammarat, Pattani Krabi ஆகிய மண்டலங்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தெற்காசிய நாடுகளில் தாய்லாந்தில் 20 லட்சம் பேர்வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள 10 மாநிலங்கள், கடந்த பத்து நாட்களாக பொழியும் மழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசிய எல்லை அருகே அமைந்துள்ள தொழில் நகரமான ஹாட் யாய்-இல் ஒரே நாளில் 33.5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இது 300 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு எனக் கூறப்படுகிறது.
தாய்லாந்தில் பெய்த கனமழையால் பல ஊர்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 20 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளில் படகுகளையும் உலங்கூர்திகளையும் பயன்படுத்துமாறு ராணுவத்திடம் அரசு கோரியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளின் புகைப்படங்கள் மூலமாக வீடுகளும் வாகனங்களும் மூழ்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காக வீடுகளின் மாடிகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தாய்லாந்தில் பெய்யும் இடைவிடாத மழையின் விளைவாக அண்டைநாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வியட்நாமில் ஒரு வாரத்தில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான மக்கள் தனித்துவிடப்பட்டு இருப்பதாகவும் உதவி பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.


