Saturday, April 4, 2026

சிலாங்கூரில் இளைஞர்கள் தற்கொலை அதிகரிப்பு!உடனடி நடவடிக்கை அவசியம்!! – டாக்டர் சுரேந்திரன்

சிலாங்கூர் மாநிலத்தில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதும் அதிர்ச்சிககுரியதூம் என்று மக்கள் முன்னேற்ற கட்சி-பிபிபி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

“இளைஞர்களின் எதிர்காலத்தையும் அவர்கள் சார்ந்த குடும்ப நலனையும் சமூகத்தின் நிலைத்தன்மையையும் பாதிக்கும் இந்த நிலைமைக்கு உடனடியான, ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்”.

தற்கொலை என்பது ஒரு ஒரு மனிதனின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அது சமூக, பொருளாதார, கல்வி, உணர்ச்சி மற்றும் குடும்ப நிலைகளின் கூட்டு விளைவாகும்

குறிப்பாக, மனநலம் தொடர்பான விழிப்புணர்வு குறைவு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அழுத்தம், குடும்ப பிரச்சினைகள், சமூகத்தில் அதிகரிக்கும் தனிமை உணர்வு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கக்கூடும்.

எனவே, பிபிசி சார்பில் கீழ்கண்ட பரிந்துரைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

  1. மாநில அரசு மற்றும் சுகாதார அமைப்புகள் இணைந்து மனநலம் தொடர்பான தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தல்
    பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர் தங்குமிடங்களில் மனநல ஆலோசனை சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  2. அவசர உதவி ‘ஹோட்லைன்’ மற்றும் கவுன்சிலிங் சேவையை வலுப்படுத்துதல்.
    இளைஞர்கள் தங்களின் பிரச்சினைகளை நம்பிக்கையுடன் பகிரக்கூடிய இடங்கள், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.
  3. பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோருக்கான மனநல விழிப்புணர்வு பயிற்சிகள்,
    ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றைக் களையும் திறனை வளர்த்தல் மிக முக்கியம்.
  4. சமூக அடிப்படையிலான ஆதரவு வலையமைப்புகளை உருவாக்கல்
    தன்னார்வ அமைப்புகள், இளைஞர் குழுக்கள், உள்ளூர் சமூகங்கள் இணைந்து அனுசரணைமிக்க உதவியை வழங்க வேண்டும்.
  5. சமூக ஊடகங்களில் பொறுப்பான தகவல் பரப்பல்:
    தற்கொலைச் சம்பவங்களை sensationalise செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக உதவி மற்றும் ஆதரவு வழிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இளைஞர்களின் உயிர் என்பது சமூகத்தின் மிக முக்கியமான சொத்து. ஒருவரை இழப்பது ஒரு குடும்பத்திற்குப் பெரும் துயரம் என்பதுடன், சமூகத்தின் எதிர்காலத்துக்கும் பெரிய இழப்பாகும்.

இந்த நிலையை மாற்ற அரசின் அனைத்துத் துறைகளும் குறிப்பாக, கல்வித் துறை, நல அமைப்புகள், பெற்றோர், மற்றும் இளைஞர்கள் — ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தவிர்க்க முடியாத கடமையாகும்.

நாம் இளைஞர்களின் மனநலத்தை பாதுகாப்பதன் மூலமாக, அவர்களின் எதிர்காலத்தையும் நமது சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும்
சொன்னார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை