Monday, May 25, 2026

பொங் மொக்தார் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு: லோக பால மோகன் இரங்கல்

டத்தோஸ்ரீ பங்ளிமா புங் மொக்தார் ராடின் மறைவிற்கு மக்கள் முற்போக்குக் கட்சி-பி.பி.பி. தலைவர் டத்தோ லோக பால மோகன் ஆழ்ந்த னுதாபம் தெரிவித்துள்ளார்.

“சபா மாநில மக்களுக்கு, குறிப்பாக தேசிய அரசியலுக்கு டத்தோஸ்ரீ பங்ளிமா பொங் மொக்தார் ராடினின் மறைவு பெரிய இழப்பாகும். இத்துயரச் செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தங்களுக்கும் பி.பி.பி. கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது”.

1999-ஆம் ஆண்டு முதல் தொடர் ஆறு தவணைகளாக கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, அந்தத் தொகுதியில் நீண்டகாலம் பணியாற்றிய மிகச் சிறந்த தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் பொங் மொக்தார்.

இந்தச் சாதனை, அவர் மக்களிடையே பெற்றிருந்த நம்பிக்கையையும் அவரின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

சபா அரசியல் சூழ்நிலை மாறிய கடினமான காலகட்டத்தில், பலர் கட்சியை விட்டு விலகியபோதிலும், பொங் மொக்தார் உறுதியுடன் முன்வந்து தேசிய முன்னணி சபா மாநிலத் தலைவராகவும் அம்னோ சபா தலைவராகவும் திறம்பட செயல்பட்டார் மொக்தார், கடைசிவரை இந்தப் பொறுப்புகளை நேர்மையாக மேற்கொண்டார்; இது, கண்டிப்பான தலைவரான அவரின் வலிமையையும் காட்டுகிறது.

அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும் மக்களின் ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டமன்ற தேர்தலில்கூட, அவர் தன்னுடைய பாரம்பரியத் தொகுதியான லாமாக்-ஐ வெற்றிகரமாக தக்கவைத்தார்.

தன்னடக்கம், தெளிவான பேச்சு, தைரியமாக கருத்து சொல்வது போன்ற தனிப்பட்ட பாங்கால் அவர் மலேசிய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவும் அனைவரும் அறிந்த தலைவராகவும் திகழ்ந்தார்.

அவரின் ஆன்மா சாந்தியடைய பிபிபி கட்சி சார்பில் பிரார்த்திப்பதாகவும். குடும்பத்தினர் இந்தக் கடினமான காலத்தை சமாளிக்கத் தேவையான வலிமையையும் தைரியமும் பெறவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் என்று டத்தோ டாக்டர் லோகா பாலா வெளியிட்ட இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை