Thursday, April 2, 2026

MIPP தலைவரென புனிதன் தன்னை அடையாளப் படுத்தக்கூடாது!

மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்.ஐ.பி.பி.) தலைவர் என புனிதன் தன்னை இனி அழைத்துக் கொள்ள கூடாது என்றும் நாங்கள் தான் உண்மையான எம்ஐபிபி கட்சியின் பொறுப்பாளர்கள் என்றும் பொதுச் செயலாளர் டத்தோ மணிமாறன் கண்ணன், கட்சியின் பேச்சாளர் டத்தோ சுதன், பொருளாளர் டத்தோ டி எஸ் ராமமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

சந்திரசேகரன் சுப்பிரமணியன் உண்மையான தலைவராக இருக்கும் எம்ஐபிபி கட்சியை முறைப்படி தொடங்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தி வருவதாகவும் எங்களின் இந்த கட்சியில் இணைவதற்காக இடையில் வந்த புனிதன் உறுப்பினரே ஆகாத நிலையில் அவர் எப்படி தன்னை தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள முடியும் என்றெல்லாம் கேள்விக்கணைகளை ராமமூர்த்தியும் மணிமாறனும் செய்தியாளர்களிடம் அடுக்கினர்.

இந்த கட்சியில் இணைந்து கொள்வதாக கொள்வதாக புனிதன் தெரிவித்த பொழுது தங்கள் சம்மதித்ததாகவும் முதலில் உறுப்பினராக சேருங்கள் என்று உறுப்பிய படிவத்தைக் கொடுத்ததாகவும் ஆனால் அதன்படி அவர் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

நாங்கள் உருவாக்கிய கட்சியில் புனிதன் உறுப்பினராகவே சேராத நிலையில் எப்படி தலைவர் என்று தன்னை பொதுவெளியிலும் அரசியல் தளத்திலும் புனிதன் சொல்லிக் கொள்ள முடியும் என்று இவர்கள் கேட்டனர.

இது குறித்த விவரத்தை கடந்த முறை நாங்கள் ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியதும் புனிதன் தரப்பினர் அவசர அவசரமாக சென்று சங்கப் பதிப்பகத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலை கொடுத்துள்ளனர்.

அதில் உள்ள விவரங்கள் யாவும் உண்மை இல்லாதவை என்றும் அவசர அவசரமாக இவரே பொறுப்பாளர்களே நியமித்துக் கொண்டு போலியான நிர்வாக குழு பட்டியலை சங்கப் பதிவாக்கத்தில் புனிதன் வழங்கியிருக்கிறார் என்று இந்த செய்தியாளர் விளக்கத்தில் தெரிவித்தனர்.

புனிதன் தலைமையில் தேசிய கூட்டமோ அல்லது ஆண்டு பேராளர் மாநாடோ என எதுவும் முறையாக நடைபெறாத நிலையில் அவர் எப்படி கட்சியின் தேசிய பொறுப்பாளர்களை நியமிக்க முடியும்?

எங்களுடைய கட்சியில் இணைந்து செயல்படுவதற்கு புனிதனுக்கு நாங்கள் வாய்ப்பு அளித்தோம்.

அவர் அவ்வாறு செய்யாத நிலையில் கட்சியை அபகரிக்க பார்ப்பதும் தான்தான் உண்மையான தலைவர் என்று சொல்லிக் கொள்வதும் ஜனநாயக முறை கிடையாது.

பொய்யான நிர்வாக குழு பட்டியலை அரசாங்கத்திடம் அளிப்பது, தன்னை ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவருக்கு அடியோடு பொருத்தமாக இல்லை.

எனவே இனிமேல் புனிதன் தன்னை எம் ஐ பி பி தலைவர் என அறிவிக்கவும் பிரகனப்படுத்தவோ கூடாது. நாங்கள்தான் உண்மையான எம் .ஐ பி. பி. பொறுப்பாளர்கள் என்றும் இந்த இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் சுப்பிரமணியம் இதேக் கட்சி விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளதால் இந்த செய்தியாளர் கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை