
தன் வீட்டின் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளை யர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்திய காவல் துறைக்கு நன்றி நன்றி தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட குடும்ப தலைவரும் குத்தகையாளருமான தனபாலன் முருகையா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 14-12-2023 ஆம் தேதி பண்டார் பூச்சோங் உத்தாமாவில் உள்ள தன் வீட்டில் முகமுடி அணிந்து வந்து கொள்ளையடித்தனர்.
92 வயதான தன் அம்மாவை கடுமையாக தாக்கியதுடன் தன்னையும் கடுமையாகத் தாக்கினர்.
தங்களின் ஒரு வயது குழந்தை மீதும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர். ஏறக்குறைய 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அபகரித்துக் கொண்டு பாதுகாப்பு பெட்டகத்தையும் எடுத்துச் சென்றனர்
இது குறித்து புகார் செய்திருந்த நிலையில், ஒரு மாதத்திற்குப்பிறகு போலீசார் தன்னை அழைத்தனர் இன்று தெரிவித்த மு தனபாலன், “போலீசாரிடம் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சில பொருட்களை போலீசாருக்கு அடையாளம் காட்டினேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “தன் வீட்டில் கொள்ளை யடித்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தேன்” .
இதன் தொடர்பில், மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் வி.கே.ஸ்ரீரமேஷ்கூட அதிகமாக பாடுபட்டார்.
“தேசிய போலீஸ் படைத் தலைவர், புக்கிட் அமான் குற்றவியல் தடுப்புப் பிரிவு, மலேசிய மனித உரிமை ஆணையம்-‘சுஹாகாமிடமும் மகஜரை சமர்பித்தோம்”.

தன் வீட்டில் கொள்ளையடித்த மூவரை,இரண்டு ஆண்டுகளுக்குப் பின்,
போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இம்மாதம்(டிசம்பர்) 24, 26-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வருகிறது.
என் வீட்டில் கொள்ளையடித்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்றும் தனபாலன் முருகையா தெரிவித்தார்.


