Thursday, April 2, 2026

பிபிபி – ஒரு முழுமையான, மதிப்புமிக்க கட்சி: -நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி செயலாளர்

மக்கள் முற்போக்கு கட்சி(பிபிபி), ஒரு முழுமையான, மதிப்புமிக்க, எந்தவித சிக்கலும் இல்லாத அரசியல் கட்சியாகும்.

பிபிபி-யின் பங்களிப்புகள் ஒருபோதும் வீணாகாது; அதன் போராட்டம் எப்போதும் புறக்கணிக்கப்படாது என்று தேசிய முன்னணி
நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாஷிம் ரோஸ்லி தெரிவித்தார்.

நேற்று காலையில் நடைபெற்ற பிபிபி
நெகிரி செம்பிலான் மாநில மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இவ்வாறு பேசினார்.
பாரிசான் நேஷனல் (BN) நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ மொஹமட் ஹசனை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய டத்தோ ஹாஷிம், நாட்டின் அரசியல் சூழலில் பிபிபி தொடர்ந்து முக்கியமான மற்றும் பொருத்தமான பங்கை வகித்து வருவதாகக் கூறினார்.

“சவால்களையும் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்ட போதிலும் பிபிபி உறுப்பினர்கள் கட்சியுடன் உறுதியாக நிலைத்து நிற்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது”என்றார்.

பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகனின் தலைமையே உறுப்பினர்களை கட்சியுடன் உறுதியாக இணைத்துள்ளது.

பிபிபி-யின் மற்ற தலைவர்களும் சிறப்பானவர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டிலிருந்து BN-இன் மாநில செயலாளராக பணியாற்றி வருவதாகக் கூறிய டத்தோ ஹாஷிம், அந்தக் காலகட்டம் முழுவதும் BN-க்கு பிபிபி வழங்கி வரும் நிலையான ஆதரவைத் தாம் எப்போதும் மதித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மாநில பிபிபி தலைவர் ஆறுமுகம், தன் உரையில் பிபிபி -க்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் டத்தோஸ்ரீ மொஹமட் ஹசனுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நெகிரி செம்பிலான் மாநில பிபிபி மாநாட்டில் சுமார் 500 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பிபிபி துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, பிபிபி பொதுச் செயலாளர், மகளிர் பிரிவு மற்றும் தகவல் பிரிவு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை