
மக்கள் முன்னேற்றக் கட்சியின்(பிபிபி)இன் ஆண்டுக் கூட்டம் ஜனவரி 18 இல் கோலாலம்பூர் உலக வர்த்தக மையம் (WTCKL) இல் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் தெரிவித்தார்.
பி பி பி கட்சியின் தேசிய உச்சமன்றக் கூட்டம் 2026 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று கட்சியின் தேசிய தலைமையகத்தில் நடைபெற்ற பின் செய்தியாளர்களை தேசியதா தலைவருடன் முக்கிய பொறுப்பாளர்களும் சந்தித்தனர்.
தேசிய முன்னணித் தலைவரும் துணைபா பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க இருக்கிறார் என்றும் அவர் இன்றைய செய்தியாளர்க் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 3,000-க்கும் மேற்பட்ட பிபிபி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கட்சியின் முதன்மை பிரிவு, இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பிரதிநிதிகளும் அடங்குவர்.

தேசிய முன்னணியில் பிபிபியின் முக்கியத்துவமும் தொடரும் அரசியல் பங்களிப்பும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த 16வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் பிபிபி கட்சியின் பங்களிப்பு குறித்து அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான ஜாஹிட் ஹமிடி அறிவிப்பார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் உலோக பால மோகன் குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தின் இரண்டாம் அமர்வில், பிபிபி உறுப்பினர்கள் 10 தீர்மானங்களை விவாதித்து முன்வைப்பார்கள். இவை கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள், தேசிய ஒற்றுமை, இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய தேசிய விடயங்களை உள்ளடக்கியவை.
அதில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அரச விசாரணைக் குழு (Royal Commission of Inquiry – RCI) அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இதன் மூலம், மலேசிய மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்படுகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.



