
தமிழ் பெருங்குடி மக்கள் புலம்பெயர்ந்து வாழும் இம்மலையக நிலத்தில் தமிழ்ப் புத்தாக்கப் பணியில் தங்களை அயராது ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் அரச வானொலி- தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிஎம்-இன் தமிழ்ச் செய்தி பிரிவினர்.
இதன் தொடர்பில் வானொலி, தொலைக்காட்சி (டிவி2) பொறுப்பாளர்கள் என இருதரப்பாரும் கைகோத்து தமிழ் புத்தாக்கப் பணியில் ஈடுபடுவது உள்ளார்ந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவர்கள் அண்மையில் தமிழ் மொழிக்கு கொடை அளித்துள்ள புத்தாக்கச் சொல் ‘திரைப்பிடிப்பு’.
விவேக தொலைபேசியைப் பயன்படுத்துகின்ற அனைத்து தமிழர்களுக்கும் பழகிவிட்ட ஆங்கில சொல்லாடல் ‘screen shot’.
இதற்குத்தான் தமிழில் திரைப் பிடிப்பு இன்னும் சொல்லைப் புதுக்கி, அதைத் தமிழ் உலகத்திற்கு அளித்து, தங்களின் செய்தி அறிக்கைகளிலும் அண்மைக் காலமாக பயன்படுத்தி வருவது தமிழ் வாழும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

வாழ்க தமிழ்!
வளர்க ஆடிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினர்!!


