
மலேசியத் தமிழ் பள்ளிகளில் நிறுவு-வதற்காக ஆறு திருவள்ளுவர் சிலைகள் இரு தினங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டன என்றும் அவை யாவும் கப்பல் வழியே விரைவில் மலேசியாவை வந்து சேரும் என்றும் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்தியா தெரிவித்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை சந்தோசம் வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ‘கலைமாமணி’, ‘பெருந்தமிழன்’ டாக்டர் வி.ஜி. சந்தோசம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆறு திருவள்ளுவர் சிலைகள் ஒப்படைக்கப் பட்டன.

மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் நிறுவுவதற்காக இந்தத் திருவள்ளுவர் சிலைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும்..
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மலேசியக் கிளைத் தலைவர் பெருந்தமிழன்
பா கு சண்முகம் வேண்டுகோளை ஏற்று டாக்டர் வி ஜி சந்தோசம் இச்சிலைகளை வழங்கினார் என்றும் மல்லை சத்தியா தெரிவித்தார்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏற்கெனவே 191 சிலைகள் வழங்கப்பட்டுள்ளன நிலையில் இந்த ஆறு சிலைகளையும் சேர்த்து இதுவரை 197 சிலைகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சிலை அனுப்பும் விழாவில், மலேசியாவில் இருந்து ‘ஒளவை’ க. முருகன், பிரான்ஸ் நாட்டின் விசு செல்வராஜ் டேனியல், துர்கா சினி MC லட்சுமி சாந்தி அர்ஜுனன் ராபர்ட் சிந்தியே, மற்றும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் உட்பட அதிகமான தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர் என்றும் தலைமுறை கோடிகண்ட தமிழ் இனவுணர்வைப் பட்டுப் போகாமல் பாதுகாப்போம் என்றும் மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க சென்னை பொறுப்பாளரும்ஆசிய-பன்னாட்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலைச் சங்க தலைவருமான மல்லை சி.ஏ.சத்தியா தெரிவித்தார்.


