Thursday, April 16, 2026

சுதந்திர இந்தியாவில் சனாதன இந்து தீவிரவாதம் மேற்கொண்ட முதல் படுகொலை!

இன்று காந்தியின்78-ஆவது நினைவு நாள்!

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பொத்திப்பொத்தி பாதுகாத்த காந்தி, விடுதலைப் பெற்ற இந்தியாவில் அரையாண்டுகூட வாழ முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட இந்த முதல் அரசியல் படுகொலையை செய்து முடித்தது வஞ்சக பார்ப்பனர்களின் கொடுங்கோல் கொள்கையான சனாதனம்;

இந்தியா விடுதலை அடையப்போகிறது என்ற தகவல் வெளியாக தொடங்கியதும், இந்த ஆரிய பிராமணர்கள் அன்றைய பாகிஸ்தான் வங்காளதேசம் எல்லாம் ஒன்றிணைந்து இருந்த இந்தியாவை அகண்ட பாரதமென அறிவிக்க வேண்டும் என்றும் அதிகாரப்படிமான சமயமாக இந்து சமயம் இருக்க வேண்டும் என்றும் மற்ற சமயத்தினர் இந்து சமயத்தினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பிராமணர்கள் சனாதன கொள்கையை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்து தீவிரவாத பிராமனர்கள் உருவாக்கிய இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மூலம் பரந்த அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதைக் கண்டு மனம் குமுறிய இஸ்லாமியர்களின் சார்பாக முகமது அலி ஜின்னா காந்தியிடம் முறையிட்டார்.

ஜின்னாவை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்ட காந்தி, இந்தியா சமதரும நாடாகத்தான் இருக்குமே ஒழிய, அது, இந்து ராஜ்ஜியமாக ஒருகாலும் இருக்காது என்று அறிவித்தார்;

ஆனாலும் இந்து மகாசபையை வழிநடத்திய பிராமணர்கள் தொடர்ந்து அதேப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் உள்ளூர அச்சம் கொண்ட இஸ்லாமிய மக்கள் பிரிந்து போகலாம் என்ற எண்ணத்தை ஜின்னாவிடம் முன் வைத்தபோது அவர் தயங்கி நின்றார்;

ஒரு கட்டத்தில் நிலைமை முற்றவே, வேறு வழி இல்லாமல் காந்தியிடம் இஸ்லாமியர்கள் ஆகிய நாங்கள் பாகிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாகப் பிரிந்து போக விரும்கிறோம் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

காந்தியோ முடிந்தவரை சமாளிக்கப் பார்த்தார். முடியாத நிலையில், ஒரு மாபெரும் தேசம், நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு விடுதலைபாபெற இருக்கும் நேரத்தில் சண்டையும் சச்சரமும் வேண்டாம்; எல்லா மக்களுக்கும் தனித்து சுதந்திர வாழ்க்கை வாழும் உரிமை இருப்பதால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டினராக வாழட்டும் என்று பிரிவினைக்கு சம்மதித்தார்.

அது மட்டுமல்லாமல் அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவிடம் இருந்த நிதி பாகிஸ்தானின் நிலப்பரப்பிற்கும் தோராயமான மக்கள் தொகைக்கும் ஏற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டது;

முன்னதாக, அதற்கு முகம்மது அலி ஜின்னா சார்பில் கோரிக்கை வைத்தபொழுது காந்தியும் ஜனநாயக முறைப்படி அதற்கு சம்மதித்தார். இவை யாவும், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் தலைமையிலேயே நடைபெற்றன.

காந்தியைக் கொன்ற சனாதன தீவிரவாதி கோட்சே.

இவை யாவும் பிராமணர்களுக்கு பிடிக்கவில்லை; அன்றைய கிழக்கு பாகிஸ்தான்(வங்காளதேசம்) மேற்கு பாகிஸ்தான்(இன்றைய பாகிஸ்தான்) இரண்டும் இணைந்து, பாகிஸ்தான் என்ற பெயரில் பிரிந்துபோன நிலையில், மிச்சம் இருந்த நிலப்பரப்பான இன்றைய இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பார்ப்பனர்களின் இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸும் அழுத்தம் கொடுத்தன.

காந்தியார் அதற்கு மறுத்தபொழுதுதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம விநாயக கோட்சே என்னும் பிராமண வெறியன்.

இதுதான் சனாதன கொள்கை. இந்தக் கொள்கைதான் மலேசிய கல்விக் கொள்கையில், குறிப்பாக நன்னெறிப் பாடத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று ஒரு சிலதுகள் சந்துமுனை சிந்து பாடுகின்றன.

காந்திக்கு முன்பு நேதாஜி காணாமல் போனது எப்படி என்று இது’கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் புரிந்துவந்த காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாமதமாகத்தான் வந்து இணைந்தார்.

1920-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாயகம் திரும்பி விடுதலைப் போராட்டத்தில் காந்தி நேரடியாக கலந்துகொண்ட நேரத்தில், போராட்ட களம் இருகூறுகளாக பிளவுபட்டிருந்தது.

சனாதன ஆணிவேர் பா.க.திலகன்

ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை எதிர்ப்பது என்னும் தீவிரத் தன்மை மொண்ட குழு ஒருபுறம், ஜனநாயக முறையில் அமைதி வழியேப் போராடிய இன்னொரு குழு மறுபுறம் என இருகூறுகளாக இந்திய விடுதலைப் போராட்ட களம் பிளவுபட்டிருந்தது.

மராட்டிய சித்பவன பார்ப்பனரான பாலகங்காதர திலகர் தலைமையில் திவிரவாத குழுவும் கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் இணைந்து மிதவாத குழுவினராகவும் போராடிய காலத்தில்தான் காந்தி வந்து சேர்ந்தார்.

ஆரம்பத்தில், அவரை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்கள், தங்களின் இந்து தீவிரவாதக் கொள்கையை ஏற்க காந்தி மறுத்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர்.

ஏறக்குறைய 1930-களில் திட்டமிட்டு, 18 ஆண்டுகளுக்குப்பின் காந்தியின் உயிரை, இந்துத் தீவிரவாதக் கொள்கையான ‘சனாதனம்’ குடித்த நாள் இன்று!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை