
1947 ஆகஸ்ட் 15-இல் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா, 1950 ஜனவரி 26 இல் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது.
அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக் குழு இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை நிறைவு செய்து பிரதமர் நேருவிடம் ஒப்படைத்து, அதை முறைப்படி ஏற்றுக்கொண்ட நாள்தான் இந்த குடியரசு தினம்.
1935இல் பங்கிகாம் அரண்மனையில் பிரிட்டிஷ் மகாராணி இரண்டு மூன்று அடிமை இந்தியாக்களுக்காக நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனம் நடைமுறையில் இருந்தது.
நாடு விடுதலை அடைந்தபின் சுதந்திர நாட்டின் அரசியல், கல்வி, பொருளாதார, சமூக, பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப அந்த 1935 அரசியல் சாசனத்தின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் வரையப்பட்டது.
அந்த நாளில் ஆண்டுதோறும் பொதுவிடு முறை விடப்பட்டு குடியரசு தின கொண்டாட்டங்களும் நாட்டின் தலைநகரிலும் மாநில தலைநகரங்களிலும் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்பில் பல்வேறு அணிவகுப்பு, அதிகமான கலை நிகழ்ச்சிகள் யாவும் இடம்பெற்றன.
அவ்வகையில் சிறப்பான பங்களிப்பை அளித்த மாணவியருக்குத்தான் இன்று பிப்ரவரி ஆறாம் நாள் மாநில தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறப்பு செய்தார்.
சென்னை பெருந்தலைவர் காமராசர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், கலை நிகழ்ச்சி படைப்பிற்கான முதல் பரிசை வென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை முதன்மைச் செயலர் திருமதி ரீட்டா ஹரிஷ் தக்கர், துணைச் செயலாளர் வீர பிரதாப் சிங் ஆகியோருடன் பள்ளியின் ஆசிரியர் சிலரும் கலந்து கொண்டனர்.


