Monday, May 4, 2026

ஆலய உடைப்பில் ஈடுபட்டவர்கள் பிரதமரின் நண்பர்களா? -பொன்.வேதமூர்த்தி

ரவாங்கில் கோவில் இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராகிம் வெளி-யிட்ட எச்சரிக்கை அறிக்கை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட-வர்களை “நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு, சட்டத்தை தாங்களே கையில் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தி-யிருப்பது, அவரின் முந்தைய பேச்சுகள் ஏற்கெனவே சிலரை ஊக்குவித்து விட்டதாகக் காட்டுகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.

ராவாங்கில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட-தாகக் கூறப்படும் கோவில் இடிக்கப்பட்டதன் தொடர்பில் கருத்துரைத்த அன்வார் “நீங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும், சட்டத்தை உங்கள் கையில் எடுக்க உரிமை இல்லை” என்று கூறினார். ஆனால் குற்றம் செய்பவர்-களை “நண்பர்கள்” என அழைத்தது, ஏதோ-வொரு சமிக்ஞையை உள்ளடக்கி உள்ளதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

வழிபாட்டு இடங்கள் தொடர்பான நிலக் கொள்கையின் நீண்டகால தோல்விகளால் உருவான கோவில் பிரச்சினையை சட்டப்படி-யான தீர்வுடன் அணுகுவதற்குப் பதிலாக, கோவில்கள் சட்டவிரோதமானவை எனக் கூறிய அவரின் பேச்சு, மத உணர்வைத் தூண்டியதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அவரது அரசியல் நடவடிக்கை, அன்வர் வகிக்கும் பிரதமர் பதவியின் சட்டப்பூர்வத்தன்மை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-உடன் கையெழுத்திட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த திசைதிருப்பல் ஏற்பட்டுள்ளது.


‘சட்டத்-தின் ஆட்சி’ குறித்து அவர் பேசி-னாலும் அது பிரதமரிடமிருந்தே தொடங்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். அரசியலமைப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க எந்த உரையும் போதாது என்பதே அவர்களின் கருத்து.

மலேசியாவில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மதப் பதற்றம் தேவையில்லை; அரசியல் சாசனத்தின் மேன்மை, நிருவாக வெளிப் படைத் தன்மை போன்றவைதான் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை