Sunday, March 8, 2026

இந்து வழிப்பாட்டத் தலங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்!

பெட்டாலிங் ஜெயா, பிப் 15-
இந்து வழிபாட்டு தலங்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை எவரும் பயன்படுத்த வேண்டாம்
.மலேசிய இந்து சங்கமும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

குறிப்பாக, ஆலயங்களைப் பற்றி தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் சொற்றொடர் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் இந்து சமுதாயத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், நடந்து கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டார்.

Kuil Haram tidak sah என்ற சொற்றொடரை பயன்படுத்தாமல் Kuil Tanpa Pendaftaran Sah என்று உச்சரிக்க வேண்டும்.

மேலும் இந்து ஆலயங்களின் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்கவும் மலேசிய இந்து சங்கம் தயாராக இருக்கிறது.

இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பவிருக்கிறோம் .

பிரச்சனையை எதிர் நோக்கி இருக்கும் இந்து கோவில்கள் விவகாரம் தொடர்பாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து மலேசிய இந்து சங்கம் பணியாற்றும் என்று தங்க கணேசன் தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை