Friday, April 3, 2026

டான்ஸ்ரீ நடராஜா பெயர்த்தி திருமணம்!டத்தோஸ்ரீ சரவணன்-‘ஆழ்வார்’ ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ இர. நடராஜாவின் பெயர்த்தி திருமணம் இன்று பத்துமலை திருமுருகன் திருத்தல வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மண்டபத்தில் சீரும் சிறப்புமுற நடைபெற்றது.

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தம்பதியர், ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் தம்பதியர், எம்ஜிஆரால் அரசியல் அறிமுகம் பெற்று பின்னர் கலைஞரின் அரசியல் படைத் தளத்தில் இணைந்து தற்பொழுது தமிழ்நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரியவரும் கலைஞர் பெருமகனாரால் ஆழ்வார் என்று அழைக்கப்பட்ட வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட மலையக – தமிழக அரசியல் தலைவர்களும் ஆன்மீக சான்றோரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமான உறவினரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன், மேனாள் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கு. தேவேந்திரன், மூத்த புகைப்பட கலைஞர் பி மலையாண்டி உள்ளிட்ட பத்திரிகை வட்டத்தினரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை