
நாட்டில் தற்பொழுது, இந்து மலேசியர்-களிடையே பேசுபொருளாக மாறியுள்ள ‘ஆலய உடைப்பு’, ‘ஆலய இடமாற்றம்’ சம்பந்-தமாக, அரசாங்கமும் சமய அமைப்புகளும் நாட்டு நலனில் அக்கரையுள்ளவர்களும் சுமுக தீர்வைக்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில், ஒரு சமயத்தின் பாதுகாப்பாளராக தங்களை உருவகப்-படுத்திக்கொண்டு மற்ற இனத்தை, அவர்-களது சமயத்தை அச்சுறுத்தும் வகையில் ‘தடியெடுத்தவனெல்லாம் தண்டலரா’க செயல்படுவதை முளையிலே கிள்ளி எறியும்படி அரசாங்கத்தை குறிப்பாக பிரதமரைக் கேட்டுக் கொள்வதாக தான்ஸ்ரீ க.குமரன் தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து கூறுகையில் பிரச்சினைக்-குரிய கோவில்களை பொதுவாக ‘கோவில் ஹராம்’- ‘சட்ட விரோத கோயில்’ என்று பிரதமர் முதல் பலரும் கூறுகின்றனர்.
இந்த நாட்டிற்குள் எந்த ஆவணமுமின்றி கள்ளத்தனமாக, அல்லது சட்ட விரோதமாக நுழைந்து தங்கி (அவர்களில் பலர் குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர்) இருப்பவர்களை அல்லது வேலை செய்பவர்களை PATI (Pendatang Asing Tanpa Izin) அனுமதியின்றி வந்த வெளிநாட்டு குடியேறிகள் என்று மரியாதையாக குறிப்பிடும்போது, இந்த நாட்டின் விடுதலைக்கும், இன்றைய வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக இருந்து உழைத்த குடிமக்களின் வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் கோவில்களை ‘ஹராம்’ என்று கொச்சையாகவோ ”சட்டவிரோதம்” என்று பெரும் குற்றம் இழைத்ததைப் போலவோ உருவகப்-படுத்துவது சமய நல்லிணகத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதனை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என்று எச்சரித்த அவர்,
இதுபோன்ற சொற்களை எல்லா நிலைகளி-லும் குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் தவிர்க்கவேண்டும் என்று தான்ஸ்ரீ குமரன் நினைவுறுத்தினார்.
புக்கிட் மெர்தாஜம், கூலிம் சாலையில், மருத்துவ மனை க்கு அருகில் உள்ள அருள்மிகு தேவ மருத்துவர் ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தை உடைக்க-அகற்ற போராட்டம் நடத்தப் போவதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்தி, இந்து சமய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட தான்ஸ்ரீ, இது குறித்து பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் ஆர்.எஸ். ராயர் போன்றவர்கள் காவல் துறையில் செய்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுதிருப்பதாகக் கூறி இருந்தாலும் தொடர் நடவடிக்கை இல்லாமல் அவற்றை கிடப்பில் போட்டுவிடுவது தொடரக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
பிரச்சினைக்குரிய கோவிலை எழு வயதிலிருந்து தானறிந்திருப்பதாகவும் ஜப்பானியர் காலத்தில் மருத்துவ மனைக்கு பக்கத்தில் இருந்த காண்ட்வெண்ட் பள்ளியில் 1942 முதல் 1945-ஆம் ஆண்டு வரை படித்தபோதும், 1946-1951-இல் ஆறாம் வகுப்புவரை இராமநாதன் தமிழ்ப் பள்ளியில் படித்தபோதும் நண்பர்களுடன் அவ்வாலயத்திற்கு சென்று வழிபட்டதை நினைவுகூர்ந்தார்.
மருத்துவமனை தோற்றுவிக்கப்பட்ட காலக் கட்டத்திலேயே இந்த மருத்துவ மனை உருவாகி இருக்கவேண்மென்றும் அந்நாளில் மருத்துமனையில் டாக்டர்கள் முதல் ஆயாமார்வரை தொன்னூறு விழுக்காடு இந்துத் தமிழர்களே பணிபுரிந்தனர்.
இன்று பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், சுற்றுவட்டார மக்கள் ஆலயத்தை பயன்படுத்தி வருவதாக் குறிப்பிட்டார்.
இறைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தந்தையார் டத்தோ இப்ராகிம் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்குமுன் இந்த மருத்துவ மனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி, 1959-1969-செபரங்பிறை நாடாளு மன்ற உறுப்பின-ராகவும், நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றியவர்.
கூலிம் செல்லும் வழியில் ‘சூரோ தெக்கூனி’ல் உள்ள டத்தோஸ்ரீ அன்வாரின் குடும்ப வீட்டிற்கு இந்தக் கோவிலைக் கடந்துதுதான் ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்றும் இந்தக் கோவில் குறித்து டத்தோஸ்ரீ நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் மலேசிய இந்திய சமூகத்தில் வாழும் வரலாறாகத் திகழும் தான்ஸ்ரீ க. குமரன் கூறியுள்ளார்.
சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டு பழைமையான கோவிலை ‘ஹராம்'(சட்ட விரோதம்) என்று கூறுவதாலோ, ”உடைப்-பேன்” ”தகர்ப்பேன்” என்று கொக்கரிப்ப-தாலோ எந்த நன்மையும் விளையப்போவ-தில்லை.
தனிப்பட்ட ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயல்கள் இஸ்லாமியர் அல்லாத மலேசியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தவிர, சாலை விரிவாக்கம், நகர்மேம்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு வழிபாட்டுத்-தலங்கள் தடையாக இருந்தால் நாட்டு நலனுடன் சம்பந்தப்பட்ட சமயத்தினர் நலனையும் முன்வைத்து கலந்துரை-யாடலின் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்-கொள்ள வேண்டுமென்று அனைத்து தலப்பினரயும் கேட்டுக் கொள்வதாக மேநாள் துணை அமைச்சருமான தான்ஶ்ரீ குமரன், இதன் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..


