Thursday, April 2, 2026

ஃபிர்தௌஸ் வொங் பிபிபி குறித்து கருத்து கூற தகுதியற்றவர்: – பிபிபி இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன்

மக்கள் முற்போக்கு கட்சி-பிபிபி குறித்து கருத்து தெரிவிக்க ஃபிர்தௌஸ் வொங் வை ஹங் தகுதியற்றவர் என அதன் இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்துள்-ளார்.

பிபிபி கட்சி அவர் பிறக்கும் முன்னரே உருவாகி செயல்பட்டு கொண்டிருக்கும் அரசியல் இயக்கம் என்றும் அதன் இருப்-பையும் பங்களிப்பையும் இகழ்ந்து பேசுவது அகங்காரத்தையும் பொறுப்பின்மையையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமை என்பது மலேசியா உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டின் நிலைத்தன்மைக்கு அடிப்படையாக இருந்து வருகின்ற முக்கியக் கொள்கை என்றும் அந்த உணர்வை மதிக்காத நிலைப்பாடு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிபிபியின் தற்போதைய தலைமைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் கருத்து வெளியிடுவது, நாட்டின் அரசியல் வரலாற்றைப் பற்றிய குறைந்த புரிதலை காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

சட்டத்தின் ஆட்சியும் நாட்டின் சமூக ஒற்றுமையும் சவாலுக்கு உள்ளாகும்போது பிபிபி எப்போதும் தைரியமாக குரல் எழுப்பி-யுள்ளதாக சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

‘சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல்’ என்பதன் அர்த்தத்தை உண்மையாக புரிந்திருந்தால், எந்தவொரு பிரச்சினையும் சட்டத்தின் அடிப்படையில் உரிய மேடை-களில் முன்வைக்கப்பட வேண்டும்; தூண்டுதல் நிறைந்த பேச்சுகள், மத உணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் அல்லது சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிபிபி தனது இருப்பை நிரூபிக்க தானாகவே புகழ்ந்துபேச வேண்டிய அவசியமில்லை என்றும் மக்கள் நலப் பணிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளே கட்சியின் போராட்ட வரலாற்றை நிரூபிக்க போது-மானவை என்றும் அவர் கூறினார்.

மேலும், சமூக ஊடகங்களில் அதிக சத்தம் போடுவது முதிர்ந்த அரசியல் அல்ல; நாட்டின் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு உண்மையான பங்களிப்பு செய்வதே முதிர்ந்த அரசியல் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாட்டின் சட்டத்தின் ஆட்சியும் பல இனங்களைக் கொண்ட சமூகத்தின் ஒற்றுமையும் எவராலும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டால், அதை பாதுகாக்க பிபிபி தயக்கமின்றி செயல்படும் என்றும் சத்தியா சுதாகரன் எச்சரித்தார்.

இனவாத அரசியலுடன் விளையாட வேண்டாம் என்றும், அது இறுதியில் அதனை முன்னெடுப்பவர்களையே பாதிக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேவேளை, பிபிபியையும் அதன் தலைவரையும் சவாலுக்கு உள்ளாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், கட்சி எந்தவொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை