
நாட்டில் இனங்களுக்கிடையே அச்சத்தையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கும் ஸம்ரி வினோத் – பிர்டாவூஸ் வோங் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பிபிபி கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் கேட்டுக் கொண்டார்.
நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவர்கள் இருவரும் எல்லை மீறிவிட்டதுடன், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட விதமாக செயல்படுகின்றனர்.
இவர்களால் நாட்டின் பொது அமைதிக்கு ஆபத்து நேர்ந்துள்ளதால், காவல் துறை உடனடியாக இவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் இவர்கள் கலவரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
செகு சந்திரா என்பவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோவில் ஹராம் என்று கூறிக் கொண்டு இவர்கள் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு எல்லை மீறிவிட்டனர்.
இவர்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் பிபிபி கட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கி போராட்டத்தில் குதிக்கும் மேநாள் துணை அமைச்சருமான டத்தோ லோக பாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இனியும் பொறுத்துக கொள்ள முடியாது. எங்களுடன் இணைந்து போராட வருபவர்கள் தாராளமாக வரலாம்.
எனது ஊர் புக்கிட் மெர்தாஜம். புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் பிறந்தேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் எட்டாம் நாள் மக்கள் முற்போக்கு கட்சியின் மூன்றாவது உச்ச மன்ற கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் இதனைத் தெரிவித்தார்
இந்தக் கூட்டத்தில், “ம.மு.கட்சியின் புதிய உதவித் தலைவர்களாக டத்தோ இண்டர்ஜிட் சிங், டத்தோ முகமட் நோவாவும் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ சந்திரசேகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்றைய கூட்டத்தில் ம.மு. கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவி தலைவர் டத்தோ இளையப்பன், தகவல் தொடர்பு துறை ஸ்டீபன், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


