
ஆலய விவகாரத்தில் அரசியல்புரிய விருப்பமில்லை; மாறாக, மலேசிய இந்து சங்கம், மகிமா உள்ளிட்ட சமய- ஆலய அமைப்புகளுடன் இணைந்து பிரச்சி-னையைக் களைய துணை நிற்போம் என்று
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் ஆலய பிரச்சினைகள் கவலைக்குரியதாகும். இதன் தொடர்பில் மஇகா பொறுப்புடன் செயல் படும்”.
கடந்த காலத்தில் ஆலயங்களைக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் உண்டு. ஆனால், மஇகா-விற்கு அதுபோன்ற நடவடிக்கையில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை.
“கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம்வரை அவருடன் கலந்துரை-யாடினேன். ஆலய விவகாரம் உட்பட சமுதாயம், அரசியல் குறித்தும் பேசினேன்; முக்கியமாக தற்போது சர்ச்சையாக உள்ள ஆலய விவகாரம் தொடர்பில் பேசினேன்”என்று டான்ஸ்ரீ கூறினார்.

இந்து சமய வழிபாட்டு உருவங்களை சிறுமைப்படுத்துவது சரியல்ல. அனைத்து அமைப்புகளும் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை நாங்கள் முன்னெடுத்-தால் அது அரசியல் ஆகிவிடும். அதனால் இந்த பிரச்சினையை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை. இதனை மலேசிய இந்து சங்கம் முன்னெடுத்தால் சமய பிரச்சினை-யாகவே இருந்துவிடும். ஒன்றிணைந்து அனைவரும் இந்த பிரச்சினையைக் களைவோம் என்றார் அவர்.


