
46 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியமான நாளாக இந்நாள்(6-04-1980) அமைந்தது. அந்த நாளில், நாக.பஞ்சு – வெ.கமலா தேவி ஆகிய நாங்கள் சமூக நலன், சமத்துவம் மற்றும் சுயமரியாதை கொள்கைகளை முன்னிறுத்தும் வகையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தோம்.
எங்கள் இணையேற்பு விழா, தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மலேசிய திராவிடர் கழகத்தின் அன்றைய தேசியத் தலைவர் ‘திருச்சுடர்’ கே.ஆர்.இராமசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பேராக் மாநிலம், சுங்கை பகுதியில் உள்ள நார்புரோத் தோட்டத்தில் நடைபெற்ற எங்கள் மணவிழா; அக்காலத்தில் சமத்துவம், சமூக உணர்வுவோடு எளிமையாக நடைபெற்றது.

அந்த நாளில் எங்கள் வாழ்க்கைத் தொடக்கம், அத்தோட்டத்தில் சாதாரண குடும்ப நிகழ்வாக அல்லாமல், அத்தோட்ட மக்கள் அனைவருக்குமே ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது.
மதச்சார்பற்ற சிந்தனையோடும், பெண்மையின் மதிப்பு, மாந்தநேயம், சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் விதமாகவும் எங்களின் வாழ்க்கை தொடர்ந்து வருகிறது.
46 ஆண்டுகளைக் கடந்தும், நாங்கள் அதே சுயமரியாதை உணர்வையும், ஒருவருக்கொருவரான மரியாதையையும் பேணிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் வாழ்க்கைப் பயணம், தந்தை பெரியார் காட்டிய வழி எவ்வளவு நிலையானது, மாந்தநேயமிக்கது என்பதை உணர்ந்துகிறது.
எங்கள் அனுபவத்தின் மூலம், சுயமரியாதை, சமத்துவம், உண்மையான மாந்தநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
’சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்னும் கொள்கையை நம்பிக்கையுடன் பின்பற்றி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக நடத்தி வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
உண்மையுடன்;
நாக.பஞ்சு – வெ.கமலா தேவி இணையர்.


